தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Arisi Puttu For Amman Worship : ஆடி வெள்ளி விரதம் – அம்மனுக்கு அரிசி புட்டு செய்து வழிபடுவது எப்படி?

Arisi Puttu for Amman Worship : ஆடி வெள்ளி விரதம் – அம்மனுக்கு அரிசி புட்டு செய்து வழிபடுவது எப்படி?

Priyadarshini R HT Tamil
Aug 11, 2023 12:00 PM IST

Arisi Puttu for Amman Worship : ஆடி வெள்ளி, கிருத்திகை, நவராத்திரி, தை மாதங்களில் அம்மனுக்கு படைப்பதற்கு இது ஒரு நல்ல நைவேத்தியம் ஆகும்.

ஆடி வெள்ளி விரதம் - அம்மனுக்கு படைக்கும் அரிசி புட்டு செய்வது எப்படி?
ஆடி வெள்ளி விரதம் - அம்மனுக்கு படைக்கும் அரிசி புட்டு செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

அரிசி புட்டு செய்ய தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு கப்

பாசி பருப்பு – முக்கால் கப்

வெல்லம் – 1 கப்

தேங்காய் - 1 கப் (துருவியது)

ஏலக்காய் – 2 (பொடித்தது)

முந்திரி – 10

நெய் – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

(தேவைப்பட்டல் எள்ளு 1 ஸ்பூன்)

செய்முறை

பச்சரிசியை நன்றாக அலசி வெள்ளை துணியில் உலர்த்தி நிழலில் காய விடவேண்டும்.

அரிசி காய்ந்ததும், அதை ரவை பதத்திற்கு மிக்ஸியில் அடித்துக்கொள்ள வேண்டும்.

அதை எடுத்து வாணலியில் பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பாசிபருப்பையும் நன்றாக வறுத்து, மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்து வறுத்து வைத்துள்ள அரிசி மாவுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் சூடான தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, இந்த மாவில் ஊற்றி பொலபொலவென பிசைந்து கொள்ள வேண்டும்.

ஒரு இட்லி பாத்திரத்தில் துணியில் வைத்து நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து பாகு பதத்துக்கு தயார் செய்துகொள்ள வேண்டும்.

தயாரானவுடன், சூடான வெல்லப்பாகை வேகவைத்து கொட்டியுள்ள அரிசி மாவில் சேர்த்து நன்றாக கிளறிவிடவேண்டும்.

அதில் தேங்காய், முந்திரி, தேவைப்பட்டால் எள்ளு ஆகியவற்றை நெய்யில் வறுத்து கொட்டவேண்டும்.

கடைசியாக ஏலக்காய் பொடி தூவி பொலபொலவென்று கிளறிவிடவேண்டும்.

ஆடி வெள்ளி, கிருத்திகை, நவராத்திரி, தை மாதங்களில் அம்மனுக்கு படைப்பதற்கு இது ஒரு நல்ல நைவேத்தியம் ஆகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்