தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Amla Idly Podi : நெல்லிக்காயில் இட்லி பொடியா? 6 மாதம் கெடாதா? வாவ்! எப்படி செய்வது? இதோ ரெசிபி!

Amla Idly Podi : நெல்லிக்காயில் இட்லி பொடியா? 6 மாதம் கெடாதா? வாவ்! எப்படி செய்வது? இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Feb 17, 2024 12:58 PM IST

Amla Idly Podi : நெல்லிக்காயில் இட்லி பொடியா? 6 மாதம் கெடாதா? வாவ்! எப்படி செய்வது இதோ ரெசிபி!

Amla Idly Podi : நெல்லிக்காயில் இட்லி பொடியா? 6 மாதம் கெடாதா? வாவ்! எப்படி செய்வது இதோ ரெசிபி!
Amla Idly Podi : நெல்லிக்காயில் இட்லி பொடியா? 6 மாதம் கெடாதா? வாவ்! எப்படி செய்வது இதோ ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

எண்ணெய் – 8 டேபிள் ஸ்பூன்

கஷ்மீரி மிளகாய் – 15

கட்டிப்பெருங்காயம் – ஒரு சிறிய உருண்டை

சுக்கு – ஒரு இன்ச்

உளுந்து – ஒரு கப்

கடலை பருப்பு – அரை கப்

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

எள் – 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – கைப்பிடியளவு

கல் உப்பு – தேவையான அளவு

செய்முறை

நெல்லிக்காயை அலசி ஈரமில்லாமல் காயவைத்து கேரட் துருவியில் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் 6 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நெல்லிக்காய் துருவலை நன்றாக வதக்கி எடுக்க வேண்டும்.

நெல்லிக்காய் நன்றாக வறுபட்டவுடன் அதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கஷ்மீரி மிளகாய், கட்டிப்பெருங்காயம், கடலைப்பருப்பு, உளுந்து, சுக்கு, வரமல்லி, எள், கறிவேப்பிலை, உப்பு என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுக்க வேண்டும்.

இரண்டு பருப்புகளும் நன்றாக சிவக்க வேண்டும். அனைத்தையும் எடுத்து ஆறவைத்து, சுக்கு மற்றும் கட்டிப்பெருங்காயத்தை மட்டும் உரலில் தட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்துவிட்டு, பின்னர் மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடித்து எடுத்தால் சூப்பர் சுவையில் நெல்லிக்காய் பொடி தயார்.

இதை இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

நெல்லிக்காயில் உள்ள நன்மைகள்

வைட்டமின் சி சத்து நிறைந்தது

வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. காலையில் தினமும் நெல்லிக்காய் சாறு பருவதால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. அது தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது

நெல்லிக்காயில் அழற்சிக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது அழற்சியை குறைக்கிறது. நீண்டநாள் உடல் உபாதைகளை தடுக்கிறது. தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடும்போது அது மூட்டு வலியை குணப்படுத்துகிறது. வீக்கத்தை தடுக்கிறது.

செரிமானத்துக்கு உதவுகிறது

வாயுவை கட்டுப்படுத்தும் திரவங்களை சுரந்து நெல்லிக்காய், செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. அது செரிமானம், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்றவற்றை தடுக்கிறது.

உடல் வளர்சிதைக்கு உதவுகிறது

நெல்லிக்காயில் வைட்டமின்களும், மினரல்களும் அதிகம் உள்ளதால், வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச்சாறு பருகுவதால், உடல் வளர்சிதை மாற்றத்துக்கு உதவுகிறது. அது உடல் எடையை பராமரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.

ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது

சர்க்கரை நோயாளிக்கு வரப்பிரசாதமாக இந்த நெல்லிக்காய் உள்ளது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய், உடலில் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் வரும் ஆபத்தை குறைக்கிறது. இதில் அதிகம் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் பாலிஃபினால்கள் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்களுக்குத்தான் நன்றியுரைக்க வேண்டும்.

நெல்லிச்சாறு மூலம் உங்கள் உடலின் கழிவுகளை நீக்கலாம்

உங்கள் உடலில் உள்ள கழிவுகளை நீங்கள் நீக்க விரும்பினால், அதற்கு நெல்லிக்காய் சாறு சிறந்த தேர்வு. காலையில் இதை பருகுவது உங்கள் உடலுக்கு நன்மையளிக்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. உடலில் சத்தை அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடலில் கொலொஜென் உற்பத்தியை அதிகரித்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் சருமத்தை யூவி கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆரோக்கியமான பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது

தலைமுடி ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. தலைமுடியை வலுவாக்குகிறது. தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது.

மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது

இதில் உள்ள அடாப்டோஜெனிக் உட்பொருள், மனஅழுத்ததை குறைக்க உதவுகிறது. மனத்தெளிவை அதிகரிக்கிறது. உடல் மற்றும் உணர்வு ரீதியிலான அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

கண்பார்வை மேம்பட உதவுகிறது

இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைத்திறன் மேம்பட உதவுகிறது. நெல்லிச்சாறை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்துக்கும், கண்ணில் நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்