தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  75th Independence Day: Tricolour Recipes To Try On This Day

75th Independence day:மூவர்ண கொடி நிறத்தில் ஸ்பெஷல் உணவுகள் தயாரிப்பது எப்படி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 13, 2022 09:00 AM IST

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட பலரும் தயாராகி வருகிறார்கள். குறிப்பாக சுதந்திர தினத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கொடி போன்று மூவர்ண நிறத்தில் உணவு தயாரிப்பதென்பது ஆண்டுதோறும் தவறாமல் நிகழும் நிகழ்வாகவே இருந்து வருகிறது.

மூவர்ண கொடி நிறத்தில் ஸ்பெஷல் உணவுகள்
மூவர்ண கொடி நிறத்தில் ஸ்பெஷல் உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்காக ஒன்றிய அரசும் ஒவ்வொரு வீடுகளிலும் தேசிய கொடி என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து, சுதந்திர தினத்தன்று அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

வழக்கமாக இந்த நாளில் தேசிய கொடி ஏற்றி வணங்குவது, இனிப்புகள் பரிமாறிக்கொள்வது, தேசப்பற்று பாடல்கள் மற்றும் வரலாற்று கதைகள் கேட்பது, பார்ப்பது என்பதோடு மட்டுமில்லாமல், தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக உணவுகள் தயாரிக்கும் நிகழ்வுகளும் நிகழ்கின்றன.

குடும்பத்தினர், நெருக்கமானவர்கள், நண்பர்களோடு நாம் கொண்டாடும் சுதந்திர தின விழாவில் நமது நாட்டின் கொடி போன்று மூவர்ண நிறத்தில் உணவு தயார் செய்து சாப்பிடுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

மூவர்ண நிறத்தில் தயார் செய்யும் இரண்டு உணவுகளை பற்றி தெரிந்துகொள்வோம்:

மூவர்ண பிரட் பக்கோரா செய்வதற்கு தேவையான பொருள்கள்

  • பிரவுன் பிரட் அல்லது சாண்ட்விச் பிரட்
  • கிரீன் சட்னி
  • மயோனைஸ்
  • ஹாட் மற்றும் ஸ்வீட் தக்காளி கெட்சப்
  • 2 கப் கடலை மாவு
  • 1 டிஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1 டிஸ்பூன் சிவப்பு மிளகாய் பொடி
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • ஓமம் சிறிது அளவு
  • எண்ணெய் பொறிப்பதற்கு ஏற்ப

செய்முறை:

ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு, சிவப்பு மிளகாய் பொடி, சோடா உப்பு, ஓமம் சிறிது அளவு சேர்த்து,, அனைத்தையும் நன்கு கிளறி கொள்ளவும். இதன் பின்னர் இந்தக் கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கொழு கொழுவென மாவு போன்ற பதத்தில் வைத்துக்கொள்ளவும்.

பின் பிரட்களை துண்டு துண்டாக மூன்று துண்டுகளில் கட் செய்து, அதில் கரீன் சட்னி, மயோனைஸ், தக்காளி கெச்சப் ஆகியவற்றை தேசிய கொடி நிறம் போல் தடவி ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து சாண்ட்விச் போல் தயார் செய்து வைக்கவும். அந்த சாண்ட்விச் பிரத் துண்டுகளை, கடலை மாவில் லேசாக தேய்து, அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பொன்னிறமாகும் வரை பிரை செய்யவும். சுவையான மூவர்ண நிறத்தில் பிரட் பக்கோரா ரெடி.

மூவர்ண கொடி போன்ற இட்லி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்

  • 1 கப் அரிசி
  • அரை கப் இட்லி ரவா
  • அரை கப் உளுந்து
  • 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • அரை கப் நறுக்கிய கேரட்
  • அரை கப் கீரை மசித்தது
  • எண்ணெய் இட்லி மீது தேய்ப்பதற்கு

தாளிப்பதற்கு

  • 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டிஸ்பூன் கடுகு
  • 1 டிஸ்பூன் சீரக விதை
  • 1 டிஸ்பூன் எள்ளு
  • 2 பச்சை மிளகாய்
  • 4-5 கருவேப்பிலை
  • அரை டிஸ்பூன் காயப்பொடி

செய்முறை:

அரசி, உளுந்து ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து இட்லி மாவு தயார் செய்து கொள்ள வேண்டும். இதன்பின்னர் அதை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மூன்று பவுல்களில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். 

அதில் நறுக்கிய கேரட்டை ஒன்றிலும், கீரை மசித்ததை மற்றொன்றிலும் சேர்த்து, சோடா உப்பும் சேர்த்துக்கொள்ளவும். இவற்றை சேர்த்த பின் நன்கு கலக்கி இட்லி தட்டில் ஊற்றி வேகவைக்கவும்.

தாளிப்பதற்கு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கி), கருவேப்பிலை, வெந்தயம், காயப்பொடி ஆகியவற்றை எண்ணெய்யில் சேர்த்து தாளித்து அதை வேகவைத்த இட்லி மீது சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு கிளறி சுடச்சுட இட்லியை பரிமாறலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்