தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  5 Arthritis Trigger Foods To Avoid

Health Tips: மூட்டுவலி இருந்தால் இந்த 5 உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டாம்

I Jayachandran HT Tamil
Mar 19, 2023 02:48 PM IST

மூட்டுவலி இருந்தால் இந்த 5 உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.

மூட்டுவலியைத் தூண்டும் உணவுகள்
மூட்டுவலியைத் தூண்டும் உணவுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

உங்களுக்கு மூட்டுவலி இருந்தால், சில உணவுகள் உங்களுக்கு கடும் மூட்டுவலியை ஏற்படுத்தும். இந்த வகை உணவுகளை சாப்பிட்டால் ஆர்த்ரைடீஸ் எனப்படும் கீல்வாதத்தைத் தூண்டி வலி, விறைப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் உணரலாம்.

கீல்வாதம் இருந்தால் தவிர்க்கவேண்டிய உணவுகள் உள்ளன. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மூட்டுகளுக்கு, இந்த எளிய உணவு மாற்றங்களை முயற்சிக்கவும்.

1. பாஸ்தா

கோதுமை பொருட்கள் - பாஸ்தா, ரொட்டி, சப்பாத்தி, பன், பிரட் போன்றவை - உங்கள் மூட்டுகளில் பிரச்னையை ஏற்படுத்தும். காரணம் கோதுமையில் க்ளூட்டன் என்ற புரதம் உள்ளது, இது மூட்டுகளை எரிச்சலூட்டும் . மூட்டுவலியை மோசமாக்கும். கோதுமை, பார்லி, கம்பு ஆகியவற்றையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

அதற்கு பதிலாக, பிரவுன் அரிசி எனப்படும் பழுப்பு அரிசியை முயற்சிக்கவும். அது நார்ச்சத்து நிறைந்தது. .

2. வெண்ணெய் மற்றும் மார்கரைன்

வெண்ணெய், மார்கரைன் ஆகியவற்றை பிரட்களில் தடவி நிறைய பேர் சாப்பிடுகின்றனர். அவற்றில் அதிகளவு கிளைகேஷன் நிரம்பியுள்ளன. இவை உணவு பதப்படுத்தும் போது உருவாகும் பொருட்கள், அவற்றை சாப்பிட்டால் மூட்டு விறைப்பு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.

அதற்கு பதிலாக, ஹம்முஸை முயற்சிக்கவும். ஹம்மூஸ் என்பதும் ஒருவகை ஸ்பிரட் அதாவது தடவிச் சாப்பிடும் பொருள். இந்த ஹம்மூஸில் கொழுப்பும் கலோரிகளும் குறைவாக உள்ளன.

3. ஹாம்பர்கர்கள்

ஹாம்பர்கர்கள் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுகள் ஆரோக்கியமற்ற குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. இது உடல் வழியாக எலும்புகளுக்குச் சென்று, குருத்தெலும்புகளை சிதைத்து மூட்டுகளில் வலியை ஏற்படுத்துகின்றன.

அதற்கு பதிலாக, சால்மன் பர்கரை முயற்சிக்கவும். சால்மன் மீன் மாட்டிறைச்சி போன்ற தன்மையைக் கொண்டுள்ளது, சால்மன் என்பது விலைமீன். இந்த விலைமீனில் நன்மை பயக்கும் ஒமேகா -3 கொழுப்புகள் நிரம்பியுள்ளது, இது கீல்வாதம் தொடர்பான வலிகள் மற்றும் விறைப்புத்தன்மையைக் குறைக்கிறது.

4. தக்காளி

கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், மிளகுத்தூள் போன்றவை மூட்டுவலியை உண்டாக்குகின்றன அவை யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதே இதற்குக் காரணம். உயர்த்தப்பட்ட யூரிக் அமிலம் கீல்வாதத்தைத் தூண்டும், இது கால்விரல்கள், விரல்கள், மணிக்கட்டுகள், முழங்கால்கள் மற்றும் முழங்கைகளின் மூட்டுகளை குறிவைத்து வலியை ஏற்படுத்தும்.

அந்த உணவுப் பொருட்களுக்குப் பதிலாக மற்ற காய்கறிகளை முயற்சிக்கவும். கீல்வாதத்துக்கு எதிராக காய்கறிகள் மிகவும் சக்திவாய்ந்த பாதுகாப்பு ஆகும், கேரட், முளைகள் போன்ற காய்கறிகளை வறுத்து, சாலடுகள், சாண்ட்விச்கள், தானிய உணவுகளில் சேர்க்கவும்.

5. சர்க்கரை பானங்கள்

மூட்டு வலி என்று வரும்போது உணவுகள் மட்டுமல்லாமல் பானங்களும் பிரச்னையை ஏற்படுத்தலாம். கோலா, சோடா, பழ ரசங்களில் இருக்கும் பிரக்டோஸ் மூட்டு வலியை ஏற்படுத்தும்.

ஒரு சமீபத்திய ஆய்வில், சர்க்கரை இல்லாத பானங்களை குடிப்பவர்களைவிட வாரத்துக்கு குறைந்தது ஐந்து முறையாவது பிரக்டோஸ் நிரப்பப்பட்ட பானங்களை குடிப்பவர்களுக்கு மூட்டுவலி பிரச்னை மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதற்கு பதிலாக ஆரஞ்சு சாறு சிறிது சேர்க்கப்பட்ட குளிர்ந்த தேநீர் குடிக்கலாம். .

இந்த கீல்வாதத்தைத் தூண்டும் உணவுகளைத் தவிர்த்தால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். உடல் எடையைக் கூட்டும் உணவுகளைத் தவிர்த்தால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவும். இதனால் உங்கள் மூட்டுகளில் ஏற்படும் பளு குறையும். தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாது.

WhatsApp channel

டாபிக்ஸ்