Karthigai Deepam: அபிராமி மீதே கை வைத்த ரியா.. ஓங்கி அறைந்த தீபா.. பரபரக்கும் கார்த்திகை தீபம் சீரியல்!
மறுபக்கம் வீட்டில் ஐஸ்வர்யா, ரியாவை கூப்பிட்டு நீ முதலில் அபிராமி மனசில் இடம் பிடிக்கணும், அவங்க வாயால் நீ தான் என் மருமகள் என்று சொல்ல வைக்கணும். அதற்கான வேலைகளை நீ செய் என்று சொல்கிறாள்.
மீனாட்சி தாலியை வீசி எறிந்த ரியா.. அபிராமிக்காக தீபா விட்ட அறை - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மில்லில் மிஷின் ஓடாதது அறிந்து, அவனே சரி செய்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, கார்த்திக் மிஷினை சரி செய்ததும், ஆனந்த் இன்ஜினியருக்கு போன் போட்டு, நீதான் மிஷினை ரெடி பண்ணியா என்று கேட்க, அவனோ நான் இல்லை என்று சொல்கிறான். இதனையடுத்து வெளியே வந்து பார்த்த போது, மேனேஜர் கார்த்திக் சார் தான் மிஷினை ரெடி பண்ணாரு என்று சொல்ல, ஆனந்த் ஷாக் ஆகிறான்.
மறுபக்கம் வீட்டில் ஐஸ்வர்யா, ரியாவை கூப்பிட்டு நீ முதலில் அபிராமி மனசில் இடம் பிடிக்கணும், அவங்க வாயால் நீ தான் என் மருமகள் என்று சொல்ல வைக்கணும். அதற்கான வேலைகளை நீ செய் என்று சொல்கிறாள்.
மேலும், பூஜை ரூமுக்கு சென்று பூஜை செய்து, ஆரத்தி தட்டை கொண்டு போய் அபிராமி கிட்ட நீட்டுனா, அவங்களே உன்னை மருமகளா ஏத்துக்கிட்டு, கட்டி தழுவுவாங்க என்று ஐடியா கொடுக்கிறாள்.
இதையடுத்து ரியா பூஜையறைக்குள் செல்ல, மீனாட்சி கழட்டி கொடுத்த தாலி அங்கு இருக்கிறது. அதைப்பார்த்த ரியா, மீனாட்சி சார்ந்த எந்த பொருளும் இந்த வீட்டில் இருக்க கூடாது என்று தூக்கி வெளியே வீசி விட்டாள். இதனை பார்த்த அபிராமி டென்ஷனாகிறாள்.
தொடர்ந்து, எப்படி நீ பூஜா ரூமுக்கு வரலாம்? அந்த தாலியை எப்படி தொடலாம், என்று ஆவேசப்பட்டு பேச, ரியா நான் தான் உங்க மூத்த மருமகள் என்று எதிர்த்து பேசி விட்டாள். இதனையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாக, ரியா அபிராமியை பிடித்து தள்ளி விடுகிறாள்.
அதில் கீழே விழ போன அபிராமியை தீபா தாங்கி பிடித்து, அத்தை மேலேயே கையை வைக்கிறியா என்று ரியாவை அறைகிறாள். பிறகு ஐஸ்வர்யாவை சந்தித்து நடந்ததை சொல்லும் ரியா, இதை ஆனந்திடம் சொல்ல போவதாக சொல்கிறாள்.
அதற்கு ஐஸ்வர்யா, ஆனந்துக்கிட்ட சொன்னீனா என்ன ஆச்சு? ஏன் இப்படி ஆச்சுனு கேட்பான். நீ அபிராமியை பிடித்து தள்ளுனது தெரிந்து விடும். அதனைதொடர்ந்து அம்மா பாசத்தில் உன்னையே வெளியே போக சொல்லிடுவான் என்று தடுக்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்