தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vadakkan Teaser: “பிழைக்க வந்தவன் வடைக்கு பதிலா பானி பூரிதான் சாப்பிடுவானா?” எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வடக்கன் டீசர்

Vadakkan Teaser: “பிழைக்க வந்தவன் வடைக்கு பதிலா பானி பூரிதான் சாப்பிடுவானா?” எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வடக்கன் டீசர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 24, 2024 09:50 PM IST

பிரபல எழுத்தாளரும், திரைக்கதை ஆசிரியருமான பாஸ்கர் சக்தி இயக்குநராக வடக்கன் படம் மூலம் அறிமுகமாகிறார். வடக்கில் இருந்து பிழைப்புக்காக இங்கு வரும் தொழிலாளர்களிடம் மனிதநேயத்தை வெளிக்காட்டுவதை போதிக்கும் விதமாக இந்த படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

வடக்கன் டீசர்
வடக்கன் டீசர்

ட்ரெண்டிங் செய்திகள்

டீசர் வெளியீடு

திரையுலகினர் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட படமாக வடக்கன் உருவாகி வந்த நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தலைதூக்கி வருவதால் பாதிக்கப்படும் உள்ளூர்வாசிகள் இருவர் அவர்களை மீது தங்களது வஞ்சத்தை தீர்த்து கொள்ளும் விதமாக படத்தின் கதை இருப்பதாக தெரிகிறது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் வடக்கன் டீசர் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் படமாக்கப்பட்டுள்ளது. வட புதுபட்டி, அல்லிநகரம், ஊஞ்சாம் பட்டி, அன்னன்ஜி போன்ற பகுதிகளில் படம் படமாக்கப்பட்டுள்ளது.

வெறுப்பு வசனங்கள்

படத்தின் டீசர் காட்சியில் எங்க பார்த்தாலும் வடக்கனுங்க வேலைக்கு வந்து நிக்குறாங்க, வடக்கனுங்கள எல்லாரையும் அடிச்சு பத்துவோம், வடக்கன் நாயே, உன்ன கொல்லாம விட மாட்டேன், பிழைக்க வரவன் இந்த ஊரு வடையை திங்க மாட்டானா போன்ற வட மாநிலத்தவரையும், வட மாநில தொழிலர்கள் மீது வெறுப்பை உமிழ்கும் விதமாக வசனங்களுடன் படத்தின் டீசர் காட்சிகள் இடம்பிடித்துள்ளன.

இருப்பினும் இந்த படத்தின் திரைக்கதை வடக்கில் இருந்து பிழைப்புக்காக இங்கு வரும் தொழிலாளர்களிடம் மனிதநேயத்தை வெளிக்காட்டுவதை போதிக்கும் விதமாக அமைந்திருக்கும் என கூறப்படுகிறது.

பாஸ்கர் சக்தி

சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஓலி சீரியலில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர் பாஸ்கர் சக்தி. எழுத்தாளரான இவர் பல்வேறு தொடர் கதைகள், சிறுகதைகளை பிரபல நாளிதழ்களில் எழுதியுள்ளார். அதே போல் அழகர்சாமியின் குதிரை, எம் மகன், பாண்டியநாடு உள்பட பல்வேறு படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். இவருடன் இலக்கிய வட்டத்தை சேர்ந்த பலரும் சேர்ந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர்.

வடக்கன் படம் பற்றி

இந்த படம் குறித்து இயக்குநர் பாஸ்கர் சக்தி கூறியதாவது: "இடம் பெயர்வு என்பது மனித வரலாற்றில் முக்கியமான விஷயமாக உள்ளது. வாழ்க்கை தேவைகள் இருக்கும் வரை இதை தவிர்க்க முடியாது. ஆதிகாலத்தில் இருந்து இது தொடர்கிறது.

வேலை கொடுப்பவர்கள் இருக்கும் வரை இந்த இடபெயர்வு இருந்து கொண்டேதான் இருக்கும். உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் நல்ல பணிகளில் உயர்ந்த வாழ்க்கை தரத்துடன் வாழ்ந்து வருவதற்கு இடபெயர்வு தான் காரணமாக உள்ளது.

தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பே, மும்பை போன்ற வட இந்திய நகர்களுக்கு கூலி வேலைக்கும், மளிகை கடை போன்ற சிறு கடைகள் வைத்து பிழைத்து கொள்ள போயுள்ளனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஒப்பந்த கூலிகளாக தமிழர்கள் சென்று பல தலைமுறைகள் வசித்து வருகிறார்கள்.

தற்போது வட இந்தியர்கள் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குடியேறி விட்டார்கள் என்று விவதிக்கப்படும் நிலையில், அதை பற்றிய படமாக வடக்கன் இருக்கும்" என்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்