தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pk Rosy In Google Doodle: கூகுள் டூடுலில் பிகே ரோஸி - யார் இவர்?

PK Rosy in Google Doodle: கூகுள் டூடுலில் பிகே ரோஸி - யார் இவர்?

Aarthi V HT Tamil
Feb 10, 2023 12:56 PM IST

மலையாள சினிமாவின் முதல் பெண் நடிகையான பிகே ரோஸியின் 120 ஆவது பிறந்தநாள் இன்று. அவரது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் ஒரு டூடுலை உருவாக்கியுள்ளது.

பிகே ரோசி
பிகே ரோசி

ட்ரெண்டிங் செய்திகள்

உலகில் பல்வேறு இடங்களில் தங்களுக்கு தெரியாமல் பலரும் ஏகப்பட்ட சாதனைகளைச் செய்து இருக்கின்றனர். அவர்களை திறமையைக் கூகுள் டூடுல் கவுரவித்து வருகிறது. அந்த வகையில் பிகே ரோஸியின் 120 ஆவது பிறந்தநாளில் கவுரவித்து உள்ளது.

பிகே ரோசி யார்?

பிகே ரோசியின் இயற்பெயர் ராஜம்மா. அவர் 1903 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்தார்.பவுலோஸ் மற்றும் குஞ்சிக்கு பிறந்தார். தந்தையின் திடீர் மரணம் குடும்பத்தை வறுமையில் தள்ளியது. அவள் தனது ஆரம்ப வருடங்களைப் புல் வெட்டும் தொழிலாளியாகச் செலவழித்து வந்தார். கலை நிகழ்ச்சிகளில் அவருக்கு இருந்த ஆர்வத்தை அவரின் மாமா அங்கீகரித்தார். அவரை இசை மற்றும் நடிப்பு கற்றுக்கொடுத்தார். நடனத்தின் பாரம்பரிய வடிவங்களையும் தமிழ் நாட்டுப்புற நாடகங்களையும் கற்றுக் கொண்டார்.

1928 ஆம் ஆண்டில், ஜே.சி. டேனியல் தனது படத்திற்கு ஒரு கதாநாயகி தேவைப்பட்டபோது. ​​ அப்போது பிகே ரோசி கேரளாவின் நாயர் சாதியைச் சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணாக நடித்தார். தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணாக இருந்துவிட்டு நடித்ததற்காக நாயர் சமூகத்தினர் பின்னர் அவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரின் வீடு உயர் சாதியினரால் எரிக்கப்பட்டது. இதனால் மாநிலத்தை விட்டு வெளியேறி ஒரு லாரியில் தமிழகத்திற்குச் சென்றாளர். அப்போது லாரி ஓட்டுநரான கேசவன் பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு, தமிழ்நாட்டில் அவரது மனைவியாக வாழ்ந்தார். ராஜம்மாள் என பெயர் மாற்றிக் கொண்டு படங்களில் நடிக்காமல் வாழ்ந்து வந்தார்.

2019 ஆம் ஆண்டில், வுமன் இன் சினிமா கலெக்டிவ் (WCC) அவரின் பெயரை மீட்டெடுக்கும் முயற்சியில், அவரது பெயரில் ஒரு திரைப்பட சங்கத்தைத் தொடங்கியது. அந்த அறிக்கையில், “எங்கள் திரைப்பட சங்கத்திற்கு பிகே ரோஸி திரைப்படம் என்று பெயரிடும் இந்த செயல் சமூகம் என்பது அவர்களின் பாலினம், சாதி, மதம் அல்லது வர்க்க இருப்பிடங்கள் மற்றும் நமது சொந்த கற்பனையின் மூலம் ஆதிக்க சினிமா வரலாற்றிலிருந்து ஒதுக்கப்பட்ட அனைவரையும் கவனத்தில் கொள்ள ஒரு தாழ்மையான முயற்சியாகும்” என்றனர்.

தி லாஸ்ட் சைல்ட் படத்தில் அவர் நடித்தது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஆற்றிய பங்களிப்பு, பல தசாப்தங்களுக்குப் பிறகு அவர் நடிப்பை விட்டுவிட்டு மறதியின் வசதியைத் தேர்ந்தெடுத்தார். "உங்கள் தைரியத்திற்கும், நீங்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்திற்கும் நன்றி, பிகே ரோஸி" என்று கூகுள் குறிப்பிட்டு உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்