Vyjayanthimala Dance: 90 வயதிலும் மாறாத அபிநயம், அசைவுகள்..! ராமர் கோயிலில் நடனமாடி சர்ப்ரைஸ் தந்த வைஜேந்திமாலா
90 வயதாகும் பழம்பெரும் நடிகையான வைஜேந்திமாலா அயோத்தி ராமர் கோயிலில் பரதநாட்டியம் ஆடி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டா நிகழ்வு கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கோயிலில் தொடர்ச்சியாக ராக சேவா என்ற பெயரில் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிகழ்ச்சிகளில் நாடு முழுவதிலும் இருந்து பிரபலங்கள் பலரும் பங்கேற்று வருகிறார்கள். கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ச்சியாக 45 நாள்கள் வரை நடைபெறுகின்றன.
இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் 90 வயதாகும் பழம்பெரும் நடிகையான வைஜேந்திமாலா நடனமாடியுள்ளார். இவரது நடன விடியோ இணையவாசிகளை கவர்ந்த நிலையில் அதன் விடியோவும் வைரலாகி வருகிறது.
வயதானாலும் அபிநயம் குறையாமலும், அற்புத நடன அசைவுகளாலும் பார்ப்பவர்களை பிரமிப்பை ஏற்படுத்தினார் வைஜேந்தி மாலா. சிவப்பு நிற புடவை அணிந்து, பரதநாட்டியத்துக்கு ஏற்றவாறு சிகையலங்காரம் செய்து கொண்டு அவர் ஆடிய நடனம் வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் என்பதை நிருபணம் செய்யும் விதமாக அமைந்திருந்தது.
கடந்த மாதம் 26ஆம் தேதி வைஜேந்திமாலாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பரதநாட்டிய விடியோவில் கவனத்தை ஈர்த்துள்ள இவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிகின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்