தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal: மூன்று மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்

Vishal: மூன்று மொழிகளில் டப்பிங் பேசிய விஷால்

Aarthi V HT Tamil
May 07, 2023 12:07 PM IST

நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்திற்காக மூன்று மொழிகளில் டப்பிங் பேசி உள்ளார்.

விஷால்
விஷால்

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் நாயகியாக ரித்து வர்மா நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். முன்னதாக 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

1960 களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் டைம் டிராவல் படமாக வித்யாசமான கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய அளவு வைரலானது.

அதிரடி ஆக்ஷன் காட்சியுடன் மிரட்டலான வித்யாசமான கெட்டப்பில் விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் வரும் காட்சிகள் அனைத்தும் டீசரில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளினால் படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நடிகர் விஷால் படத்தின் டப்பிங்கின் போது தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் பேசி உள்ளார். விஷால் டப்பிங் செய்யும் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீஸரில் இடம் பெற்றுள்ள மார்க் ஆண்டனி வசனத்தை விஷால் பேசும் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.

இறுதிகட்ட வேலைகள் படத்தில் இன்னும் இருப்பதால் விரைவில் படம் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்