தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Vikram Jumps Into Hogenakkal River After Pa.ranjith Says Pack Up

Vikram: தங்கலான் படக்குழுவினருடன் தண்ணீரில் ஆட்டம் போட்ட விக்ரம்

Aarthi V HT Tamil
Dec 06, 2022 12:48 PM IST

நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருடன் ஒகேனக்கல் தண்ணீரில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகிறது.

தங்கலான் படக்குழு
தங்கலான் படக்குழு

ட்ரெண்டிங் செய்திகள்

இதில் பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்திற்கான முதல் கிளிம்பஸ் வீடியோ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அது படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தர்மபுரியில் உள்ள ஓசூரில் நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்டுளார்.

இந்நிலையில் விக்ரம், பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர்கள் ஒகேனக்கல் அருவியில் ஜாலியாக குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இது குறித்து விக்ரம் வெளியிட்ட பதிவில், “இன்று ஒகேனக்கல் அருகில் #\Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.

‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி..தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?! அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்