Top Cinema News: “ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும்”ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல்!இன்றைய டாப் சினிமா செய்திகள்-vijay wish for speedy recovery for rajinikanth lubber pandu box office and more top cinema news today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: “ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும்”ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல்!இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: “ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும்”ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல்!இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 01, 2024 10:10 PM IST

ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல் ஈட்டிய லப்பர் பந்து, தமிழ் சினிமாவில் திருநங்கை இயக்கிய முதல் படம் உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகள் இதோ

Top Cinema News: “ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும்”ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல்!இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News: “ரஜினி நலத்துடன் வீடு திரும்பனும்”ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல்!இன்றைய டாப் சினிமா செய்திகள்

இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் ரஜினிகாந்த்

உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த் இரண்டு நாள்களில் வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இதயத்தில் (aorta) இருந்து வெளியேறும் ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வீக்கத்தை மருத்துவர் சாய் சதீஷ் அறுவை சிகிச்சை இல்லாத (transcatheter) stent முறையில் சரி செய்துள்ளார்.

ரஜினிகாந்தின் நலம் விரும்பிகளுக்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சையை தெரியப்படுத்த விரும்புகிறோம். ரஜினிகாந்த் தற்போது நன்றாக இருக்கிறார். அவர் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்” என கூறப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் சார் பூரண நலத்துடன் வீடு திரும்ப வேண்டும்

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என நடிகரும், தமிழக் வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தளபதி விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பதிவில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. @rajinikanth sir அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்

இசைஞானி இளையராஜாவுக்கு லப்பர் பந்து குழுவினர் நன்றி

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்து கடந்த 20ஆம் தேதி வெளியான லப்பர் பந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நடித்த பொன்மன செல்வன் படத்தில் இளையராஜா இசையில் இடம்பிடித்த பொட்டு வைத்த தங்க குடம் பாடல் முக்கிய காட்சியில் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டானது. இதையடுத்து படக்குழுவினர் இசையமைப்பாளர் இளையாராஜாவை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, வாழ்த்தும் பெற்றனர்.

தமிழ் சினிமாவில் திருநங்கை இயக்கிய முதல் படம்

தமிழ் சினிமாவின் முதல் திருநங்கை இயக்குநரான சம்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ள படம் ‘நீல நிறச் சூரியன்’. பர்ஸ்ட் காப்பி புரொடக்‌ஷன் சார்பில் மாலா மணியன் தயாரித்துள்ள இந்த படத்தில் கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் நடித்துள்ளனர்.

ஓர் ஆண் பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமில்லாமல் நம் சமுதாயம் எப்படி அவர்களைப் பார்க்கிறது ? அதைக் கடந்து அவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்ற கதையம்சத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீசாகிறது

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு தமன்னா வாழ்த்து

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்திருக்கும் கடைசி உலக போர் படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. இந்த படத்தின் இந்தி பதிப்பு ட்ரெய்லரை நடிகை தமன்னா வெளியிட்டு ஆதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "வாழ்க்கை பற்றி இப்படியொரு பார்வையை கொண்டு வந்த ஆதி பக்கம் நிற்கிறேன். மகாராஜா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பிறகு போர் குறித்து தாக்கம் ஏற்படுத்தும் கருத்த சொல்ல வருகிறார் நடிகர் நட்டி நட்ராஜ். முன்னெப்போதையும் விட அமைதி மிக முக்கியமான உலகில்" என குறிப்பிட்டுள்ளார்.

ஜானி மாஸ்ர் ஜாமின் ஒத்திவைப்பு

மைனர் பாலியல் புகார் வழக்கில் கைதாகியிருக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி ஜாமின் கோரி விண்ணப்பித்து இருந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 7ஆம் தேதி ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக போலீஸ் விசாரணையின்போது, திருமணம் செய்ய சொல்லி மனரீதியாக டார்ச்சர் செய்ததோடு, பல முறை மிரட்டல் விடுத்ததாக தன் மீது பாலியல் புகார் அளித்த பெண் குறித்து ஜானி மாஸ்டர் கூறியிருந்தது பரபரப்பை கிளப்பியது.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் பிரசன்னா?

விட முயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார். இந்த படத்தில் த்ரிஷா, தெலுங்கு நடிகர் சுனில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ரூ. 5 கோடி பட்ஜெட்டில் ரூ. 20 கோடி வசூல்

சிறிய பட்ஜெட்டில் உருவாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வரும் லப்பர் பந்து திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படம் ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது வரை ரூ. 20 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

துப்பாக்கி குண்டு பாய்ந்து அடிபட்ட பாலிவுட் நடிகர்

பாலிவுட் நடிகரான கோவிந்தா தனது வீட்டின் அலமாறியில் வைத்திருந்த துப்பாக்கியை சுத்தம் செய்தபோது எதிர்பாராத விதமாக ட்ரிக்கர் ஆகி வெடித்ததில் அவரது மூட்டு பகுதியில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு 10 தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும், இரண்டு நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

மஞ்சள் வீரன் படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கம்

டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்துள்ளார். "வாசனுடன் இணைந்து பணியாற்ற எண்ணினேன். ஆனால், சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டாலும் அவருடனான உறவு தொடரும்" என தெரிவித்துள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.