Tamil Movies:டீன் ஏஜ்ஜில் தமன்னா நடித்த முதல் தமிழ் படம்..கார்த்திக் - கவுண்டமணி அட்ராசிட்டி!இன்று ரிலீசான தமிழ் படங்கள்
டீன் ஏஜ்ஜில் தமன்னா, இலியானா நடித்த முதல் தமிழ் படம், சுந்தர் சி இயக்கத்தில் கார்த்திக் - கவுண்டமணி அட்ராசிட்டி செய்த படம் என இன்று ரிலீசான தமிழ் படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம்.

செப்டம்பர் 24ஆம் தேதியான இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இன்றைய நாளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
மிருதங்க சக்கரவர்த்தி
கே. சங்கர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், கே.ஆர். விஜயா, எம்.என். நம்பியார், வி.கே. ராமசாமி, பிரபு, தேங்காய் சீனிவாசன் உள்பட பலர் நடித்திருக்கும் மிருதங்க சக்கரவர்த்தி 1983இல் வெளியானது. மியூசிக்கல் டிராமா பாணியில் உருவாகியிருந்த இந்த சிவாஜி கணேசன், பிரபு ஆகியோரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. படம் வெளியான காலகட்டத்தில் சிவாஜி கணேசனின் நடிப்பு ஓவர் ஆக்டிங் எனவும் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகள் ஆகிறது.
உனக்காக எல்லாம் உனக்காக
கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, விவேக் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி இயக்கத்தில் 1999இல் வெளியான ரெமாண்டிக் காமெடி படம் உனக்காக எல்லாம் உனக்காக. படத்தின் முதல் காட்சி முதல் இறுதி வரை காமெடியில் சிரிக்க வைத்து வயிறை புண்ணாக்கியிருப்பார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானதுடன், அவருக்கு முக்கிய பிரேக் கொடுத்தது. கார்த்திக் - கவுண்டமணி காமெடி அட்ராசிட்டி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமைந்தது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டான இந்த படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது.
