Rajnikanth: கண் விழித்த ரஜினிகாந்த்.. கூறிய வார்த்தை என்ன தெரியுமா? விரைவில் மாற்றம்
Rajnikanth: உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த், தற்போது கண் விழித்து, தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நேற்றைய தினம் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நலம் குறித்த முக்கியமான அப்டேட் வெளியாகி இருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்திற்கு அடி வயிற்றுப் பகுதியில் ஸ்டெண்ட் மற்றும், எலெக்டிவ் ப்ரோசீஜர் எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது மயக்கம் தெளிந்து கண் முழித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
ரஜினிக்கு உடல்நலக் குறைவு
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், கவலையடைந்து, அவர் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான கேள்விகளை, சமூகவலைதளங்களில் எழுப்பி எழுப்பினர். இது தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தி சார்பில் வீடியோ ஒன்று வெளியானது.
அதில், " ரஜினிகாந்த் சென்னையில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. ரசிகர்கள் கவலைப்படும் அளவிற்கு அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மருத்துமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
லதா ரஜினிகாந்த் விளக்கம்
அவரது மனைவி லதா ரஜினிகாந்த், ரஜினிகாந்த் தற்போது நலமாக இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்பது, ஏற்கனவே மருத்துவர்களோடு ஆலோசனை நடத்தி, திட்டமிடப்பட்ட நிகழ்வு. அதன் படி, நேற்று மாலை 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்கு உள்ளாக, அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். இன்று காலை 6.30 மணியளவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த சிகிச்சையை மருத்துவர் சாய் சதீஷ் என்பவர்தான் மேற்கொண்டார். அவர் ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணர் எனக் கூறினார்.
வழக்கமான சிகிச்சை
ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட அந்த சிகிச்சையும் எப்போதும் செய்யக்கூடிய ஒரு வழக்கமான சிகிச்சை தான். இது அறுவை சிகிச்சை அல்ல. இதனை Elective procedure என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சையானது அவருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலினால் செய்யப்பட்டது அல்ல. ஏற்கனவே இது திட்டமிடப்பட்டு நடக்கக்கூடிய சிகிச்சை முறை. கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வாரங்களாகவே இது தொடர்பாக ரஜினிகாந்த் மருத்துவர் உடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார். அந்த ஆலோசனையின் வழியாக முடிவெடுத்த அவர், நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது
அதன் படி, நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் டாக்டர் சாய், டாக்டர் பாலாஜி மற்றும் டாக்டர் விஜய் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் நடிகர் ரஜினியின் உடல் நலம் சீராக இருக்கிறது எனக் கூறினர்.
அவருக்கு உடல் ரீதியாக சில சிக்கல்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி, அவருக்கு அடி வயிற்றுப் பகுதியில் வலி, முதுகு வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்த நிலையில், வீக்கம் அதிகமானது இதையடுத்து, ரஜினிகாந்த் இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து விசாரித்து, அவர் நலமுடன் இருப்பதை உறுதி செய்தார்.
நன்றி சொன்ன ரஜினி
இதற்கிடையில், சிகிச்சைக்குப் பின் மயக்கத்திலிருந்து கண் விழித்த ரஜினிகாந்த் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் கார்டியாக் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகிறது.