Lubber Pandhu: ஒரே வாரத்தில் இத்தனை கோடியா? பட்ஜெட்டை மீட்டி லப்பர் பந்து வசூல் சாதனை!
Lubber Pandhu: லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது.

Lubber Pandhu: தமிழ் சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி உள்ளது. ஆனல் அவை அனைத்தும் வெற்றி பெற்றதா? என கேள்வி எழுப்பினால், பதில் சொல்வது சந்தேகம் தான். அதே போல் ஒரு சில கிரிக்கெட் படங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீஸாகி ஹிட்டான வரலாறும் இருக்கிறது. அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியான சமீபத்திய ரிலீஸ் லப்பர் பந்து.
முதலில் இப்படத்திற்கு தமிழ்நாட்டில் 200 திரையரங்குகள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் ரசிகர்களிடம் கிடைக்கும் வரவேற்பால் படிபடியாக உயர்ந்து 300 திரையரங்குகளில் தற்போது ஒடிக் கொண்டு இருக்கிறது.
பாக்ஸ் ஆபீஸ் வசூல்
இந்நிலையில் லப்பர் பந்து படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. முதல் நாள் 75 லட்சம் ரூபாய் முதல் 85 லட்சம் ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்யப்பட்டது.