தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Lust Stories 2 Trailer: அள்ளும் கெமிஸ்ட்ரி.. தள்ளாடும் தமன்னா வெளியானது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ ட்ரெய்லர்!

Lust Stories 2 trailer: அள்ளும் கெமிஸ்ட்ரி.. தள்ளாடும் தமன்னா வெளியானது ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ ட்ரெய்லர்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 21, 2023 01:14 PM IST

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

Vijay Tamannaah Lust Stories 2 trailer: Volcanoes erupt in Netflix steamy new film
Vijay Tamannaah Lust Stories 2 trailer: Volcanoes erupt in Netflix steamy new film

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரிஸை இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், ஜோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் இயக்கி இருந்தனர். இந்த நிலையில் இந்த சீரிஸின் இரண்டாம் பாகமானது வருகிற ஜூன் 29 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கஜோல், நீனா குப்தா, தில்லோடமா ஷோம் விஜய் வர்மா, அம்ருதா சுபாஷ், மிருணாள் தாக்கூர், தமன்னா, அங்கத் பேடி, குமுத் மிஸ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த சீரிஸை இயக்குநர்கள் கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ், அமித் ரவீந்தர்நாத் சர்மா ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். முந்தைய பாகத்தை போலவே உருவாகி இருக்கும் இந்த சீரிஸின் டீசர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் இந்த சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக இந்த சீரிஸில் தமன்னாவுடன் நடித்திருக்கும் விஜய் வர்மாவும் அவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில், அண்மையில் தமன்னா கொடுத்த நேர்காணல் ஒன்றில் அவரிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை தமன்னா லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில்தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம். அதன் பின்னர் தான் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என சொல்ல முடியாது. ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டியது அவசியம்.

அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மாதான் என என்னால் உணர முடிந்தது. சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் பார்த்தேன். அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறி இருக்கிறார் என்று வெளிப்படையாக பேசினார்.

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்