தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay On Jawan Audio Lunch: ஜவான் ஆடியோ ஆடியோ லான்சில் விஜய்? - லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரக்கும் தளபதி 68 வேலைகள்! - அப்டேட்!

Vijay On Jawan Audio lunch: ஜவான் ஆடியோ ஆடியோ லான்சில் விஜய்? - லாஸ் ஏஞ்சல்ஸில் பரபரக்கும் தளபதி 68 வேலைகள்! - அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 30, 2023 12:48 PM IST

நடிகர் விஜய் ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நடிகர் விஜய்!
நடிகர் விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் விஜயின் இந்தப்புகைப்படம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் -ல் எடுக்கப்பட்டதாம். விஜயின் இந்த பயணமானது அடுத்தாக அவர் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தின் லுக்கிற்காக மேற்கொள்ளப்பட்டது என்று தகவல்கள் சொல்லுகின்றன. முன்னதாக தளபதி 68 படக்குழு லாஸ் ஏஞ்சல்ஸில் தளபதி 68 படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக சொல்லப்பட்டது. 

மேலும் இவர் சென்னைக்கு வரவிருப்பதாகவும், இன்று சென்னையில் நடக்க இருக்கும் ஜவான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தத்திரைப்படத்தை விஜயின்  ‘தெறி’  ‘மெர்சல்’ ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அட்லி இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் விஜயின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் திரைப்படம்  ‘லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் விஜய் உடன் நடிகை த்ரிஷா நடிக்கிறார். 

இந்தத்திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இந்தத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

IPL_Entry_Point

டாபிக்ஸ்