தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidya No.1 Serial: பரபர திருப்பங்கள்; இந்த வார வித்யா நம்பர் 1 சீரியல் கதை என்ன?

Vidya No.1 Serial: பரபர திருப்பங்கள்; இந்த வார வித்யா நம்பர் 1 சீரியல் கதை என்ன?

Priyadarshini R HT Tamil
Apr 11, 2023 12:49 PM IST

Serial Update : கைதாகும் ப்ரீத்தி.. வேதாவின் முடிவால் வித்யாவுக்கு வந்த அடுத்த சிக்கல், பரபர திருப்பங்களுடன் வித்யா நம்பர் 1 சீரியல் அப்டேட் என்ன என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

வித்யா நம்பர் 1
வித்யா நம்பர் 1

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் கடந்த வாரம் கல்யாணம் ஒன்றிற்காக போன் இடத்தில் வித்யா மீது ஒரு பெண்ணின் ஆத்மா புகுந்து கொண்டு தனது மரணத்திற்கு காரணமான மாப்பிள்ளையை பழி வாங்கினாள்.

இதையடுத்து இந்த வாரம் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, வித்யாவின் அம்மா அவளது கனவில் வந்து பசிப்பதாக கூற, வித்யா அம்மா நினைவிடத்தில் வைத்து அன்னதானம் செய்ய முடிவு எடுக்கிறாள்.

இதற்காக வித்யா மடிப்பிச்சை ஏந்தி அன்னதானத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த நிலையில், ப்ரீத்தி பார்வதியின் நினைவிடம் அமைந்திருக்கும் இடம் வேதாவிற்கு சொந்தமானது என்று கூறி அதை இடிக்க முயற்சி செய்கிறாள்.

இதனால் வித்யா, சஞ்சய் என இருவரும் ப்ரீத்தியை போலீசை வைத்து கைது செய்ய வைக்க வேதா களத்தில் இறங்குகிறாள். ஊர் மக்கள் அனைவரும் வித்யாவிற்கு ஆதரவாக நிலத்திற்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முன் வர வேதா அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை கொடுத்து பின்வாங்க வைக்கிறாள்‌.

இதனால் வித்யா செய்வதறியாது தவிக்க கடைசியில் சஞ்சய் இந்த இடம் வித்யாவின் தாய் பார்வதியின் நினைவிடம் என்றும், வித்யாவிற்கும் நமக்கும் தான் தகராறு பார்வதி செய்த உதவியை நாம் மறந்துவிட முடியாது என்று நியாயத்தைக் கூற வேதா அதை ஏற்றுக்கொண்டு நிலத்தை திருப்பி தந்து விடுவதாக முடிவு எடுக்கிறாள். ஆனால் வித்யா நேரில் வந்து நில பத்திரத்தை வாங்கிக்கொள்ளும்படி வேதா கண்டிஷன் போடுகிறாள்.

இப்படியான நிலையில் வித்யா வேதாவிடம் இருந்து நில பத்திரத்தை எப்படி வாங்க போகிறாள்? என்ற கோணத்தில் இந்த சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே வித்யா நம்பர் 1 சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்