தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidaamuyarchi: விஸ்வரூபம் எடுக்கும் ‘விடாமுயற்சி’.. ஜோடியாக த்ரிஷா..கடைக்குட்டியாக கமிட் ஆன கைதி வில்லன்? - முழு விபரம்!

VidaaMuyarchi: விஸ்வரூபம் எடுக்கும் ‘விடாமுயற்சி’.. ஜோடியாக த்ரிஷா..கடைக்குட்டியாக கமிட் ஆன கைதி வில்லன்? - முழு விபரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 06, 2023 01:06 PM IST

விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை திரிஷா இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விடாமுயற்சி
விடாமுயற்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விக்னேஷ் சிவனிற்கும் இடையே நடந்த படைப்பு தொடர்பான முரண்பாடுகள் விக்னேஷ் சிவனை அந்தப்படத்தில் இருந்து புறந்தள்ளியது. இந்த நிலையில்தான் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் 62 -ல் கமிட் செய்யப்பட்டார். 

அதன் பின்னர் அந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அதன் பின்னர் அந்தப்படம் குறித்த எந்தத்தகவலும் வெளியாக வில்லை. இதனால் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அந்தப்படத்தின் அப்டேட் குறித்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதனிடையே பைக் டூரில் பிஸியாக இருந்த நடிகர் அஜித் கடந்த ஜூலை 26ம் தேதி சென்னை திரும்பினார். ஆகையால் விரைவில் இந்தப்படத்திற்கான ஷூட்டிங் தொடங்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தில் இணைந்துள்ள நடிகர் நடிகைகள் குறித்தான விவரங்கள் தகவல்களாக வெளியாகி இருக்கின்றன. அதன் படி இந்தப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிகை திரிஷா, நடிகை தமன்னா, நடிகர் அர்ஜூன் தாஸ், நடிகர் அர்ஜூன் ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்