Varalaxmi Sarathkumar: ‘14 வருஷமா அவரும் நானும் பாத்துக்கவே இல்ல’; நார்வே நாட்டில் ப்ரபோசல்; வெக்கப்பட்ட வரு - காதல் கதை
கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்பாகவே, நானும் அவரும் சந்தித்துக் கொண்டோம். அப்பொழுதே எங்களுக்குள் ஏதோ ஒன்று இருந்தது போல தோன்றியது. ஆனால் அதை நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்லவில்லை.
வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய காதல் கதையை கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ அவர் என்னை எப்பொழுதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். என்னுடைய கேரியருக்கு அவ்வளவு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார். அவர் என் மீதும், என் குடும்பத்தின் மீதும், அளவு கடந்த அன்பும், அக்கறையும் கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு முன்பாகவே, நானும் அவரும் சந்தித்துக் கொண்டோம். அப்பொழுதே எங்களுக்குள் ஏதோ ஒன்று இருந்தது போல தோன்றியது. ஆனால் அதை நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்துச் செல்லவில்லை.
காரணம், அது எங்களுக்கு சரியான நேரமாக இருக்கவில்லை. இருப்பினும், கிட்டத்தட்ட 14 வருடங்களாக நாங்கள் தொடர்பிலேயே இருந்தோம். ஆனால் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளவில்லை. அண்மையில் சந்தித்தோம்; பேசினோம். அதன் பின்னர் எல்லாமே இயல்பாக நடந்து விட்டது.
அவர்தான் என்னிடம் முதலில் காதலைச் சொன்னார். அது மிகவும் சுவாரசியமானது. அவர் என்னுடைய அப்பா, அம்மா ராதிகா அத்தை உள்ளிட்ட அனைவரையும் நார்வே நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் முன்னிலையில், காதலை சொன்னார்.
இந்த விஷயத்தைப் பற்றி யாருக்குமே எதுவுமே தெரியாமல் இருந்ததற்கு காரணம் அவர்தான். அவருக்கு பெரிதாக சோசியல் மீடியாவில் விருப்பமெல்லாம் கிடையாது. அவர் ஒரு தனிமை விரும்பி. அவரது பர்சனல் சார்ந்த விஷயங்கள் எதையும் அவர் சோசியல் மீடியாவில் பெரிதாக போஸ்ட் செய்தது கிடையாது. அதனால்தான் எங்கள் விஷயம் இவ்வளவு சீக்ரெட்டாக இருந்தது ” என்று பேசினார்.
முன்னதாக, தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களில் நடித்து வருபவரும், பிரபல நடிகரான சரத்குமாரின் மகளுமானவர் வரலட்சுமி சரத்குமார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்த நிகழ்வில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். வரலட்சுமியின் வருங்கால கணவரான நிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். கிட்டதட்ட 14 ஆண்டுகள் இருவரும் பழகிய நிலையில், தற்போது திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. நிக்கோலாய் சச்தேவிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில், வரலட்சுமி இரண்டாவது மனைவியாகிறாரா? என்ற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி “ உலகத்திற்கு ஏற்ற வகையில் பெண்களை மாற்றுவது குறித்து சிந்திக்காதீர்கள்.
உலகத்தை பெண்களுக்கு ஏற்றார் போல மாற்றுவது பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் பெண்களாகிய நாம் நிறைய தடைகளை எதிர்கொள்கிறோம்.
உங்களுக்கான விதிமுறைகளில் வாழும் அனைத்து பெண்களுக்கும் என்னுடைய பாராட்டுகள். மக்கள் உங்களை குறித்து சொல்லும் கருத்துக்களுக்கு கவலைப்பட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.
அவர்கள் உங்களுக்காக இருக்கப்போவதில்லை. நீங்கள்தான் உங்களுக்காக இருக்கப்போகிறீர்கள். ஆகையால் வாழ ஆரம்பியுங்கள். பெண்ணாக இருப்பதற்கு பெருமை கொள்ளுங்கள்.” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, வரலட்சுமி சரத்குமார் சோசியல் மீடியாவில் ஆபாசமாக தன்னை கமெண்ட் அடிப்பவர்களுக்கு சில மாதங்களுக்கு எஸ்.எஸ். யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார்.
அவர் பேசும் போது, “ நெகட்டிவாக சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிடும் நபர்களை பார்த்து நான் ஒன்றே ஒன்று தான் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய அம்மாவையோ, தங்கையையோ அல்லது குடும்பத்தில் உள்ள பெண்களையோ இவ்வாறு பேசுவீர்களா?
உங்களுக்கு ஒருவர் பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து விட்டு விடுங்கள். நீங்கள் அவரை அன்ஃபாலோ செய்து விட்டு போய்க்கொண்டே இருக்கலாமே? எதற்காக அவரை பாலோ செய்து, அவருக்கு கமெண்ட் அடித்து, கஷ்டப்படுத்த வேண்டும்.
உங்களை நாங்கள் பாலோ செய்ய கேட்டோமா என்ன..? நீங்கள்தான் ஃபாலோ செய்கிறீர்கள். அப்படி இருக்கையில், நாங்கள் பதிவிடும் பதிவுகள் பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் இல்லையென்றால்.
அப்படியே விட்டு சென்று விடுங்கள். அது உங்கள் விருப்பம். அங்கு கமெண்ட் அடிப்பவர் முகம் தெரியாத ஆளாக இருக்கிறார். அப்படியான இடத்தில் இருந்து கொண்டு கமெண்ட் அடிப்பவருக்கு என்ன தைரியம் இருக்கிறது.
உண்மையிலேயே உங்களுக்கு கமெண்ட் அடிக்க வேண்டும் என்றால், நேருக்கு நேராக வந்து கமெண்ட் அடியுங்கள்.. நேருக்கு நேராக பேச தைரியம் இல்லாதவன் என்னை பொறுத்தவரை ஒரு கோழை. கோழையிடம் எனக்கு பேச எனக்கு விருப்பமில்லை அவனிடம் எனக்கு வேலையும் இல்லை” என்றார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்