தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha: சூப்பர் ஹிட் பட ரீமேக் - சீரஞ்சிவியின் ஜோடி! இளம் ஹீரோவுக்கு அம்மாவாகும் த்ரிஷா

Trisha: சூப்பர் ஹிட் பட ரீமேக் - சீரஞ்சிவியின் ஜோடி! இளம் ஹீரோவுக்கு அம்மாவாகும் த்ரிஷா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 05, 2023 11:58 AM IST

மலையாளத்தில் மோகன்லால், ப்ருத்விராஜ் நடித்து சூப்பர் ஹிட்டாகி, தெலுங்கில் ரீமேக்கப்படும் படத்தில் இளம் நடிகருக்கு அம்மாவாக த்ரிஷா நடிக்கவுள்ளராம்.

சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் இளம் ஹீரோவுக்கு அம்மாவாகவும் நடிக்கும் த்ரிஷா
சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் இளம் ஹீரோவுக்கு அம்மாவாகவும் நடிக்கும் த்ரிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2022இல் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியானது. படத்தில் மோகன்லால் ஜோடியாக மீனாவும், ப்ருத்விராஜ் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷனும் நடித்திருப்பார்கள். கனிகா, உன்னி முகுந்தன், காவ்யா ஷெட்டி உள்பட பலரும் படத்தில் நடித்திருப்பார்கள்.

ரசிகர்களை கவர்ந்த இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. நாகார்ஜுனா, நாகசைதன்யா நடித்த பங்கார்ராஜு படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கவுள்ளாராம். மோகன்லால் கதாபாத்திரத்தில் தெலுங்கு சினிமா மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், மீனா கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் ப்ருத்விராஜ் - கல்யாண் ப்ரியதர்ஷன் கதாபாத்திரத்தில் ஷ்ர்வானந்த் - ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷர்வானத்தின் நடிக்கும்பட்சத்தில், த்ரிஷாவின் கதாபாத்திரம் அவரது அம்மாவாக அமையக்கூடும்.

ஷ்ரவானந்த், த்ரிஷா ஆகியோருக்கு ஒரு வயதுதான் வித்தியாசம் இருக்கும் நிலையில் தாய் - மகனாக தோன்றும் நிலை உருவாகியுள்ளது. மற்ற சினிமாக்களின் ரசிகர்கள் போல் இல்லாமல் இந்த விஷயத்தில் லாஜிக் பார்க்கும் தெலுங்கு ரசிகர்கள் இதுபற்றி சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய அளவில் விவாதமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே ப்ரோ டாடி ரீமேக்கில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்