தமிழ் செய்திகள்  /  விளையாட்டு  /  Tnpl Today Match: முதல் இடம், முதல் வெற்றிக்கான போராட்டம்! கோவை - திருச்சி பலப்பரிட்சை

TNPL Today Match: முதல் இடம், முதல் வெற்றிக்கான போராட்டம்! கோவை - திருச்சி பலப்பரிட்சை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 21, 2023 10:50 AM IST

கோவை அணி நல்ல ரன் ரேட்டுடன் வெற்றி பெற்றால் முதல் இடத்தை பிடித்துவிடலாம். விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருக்கும் திருச்சி அணி முதல் இந்த சீசனின் முதல் வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கோவை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், திருச்சி பவுலர் நடராஜன் ஆகியோருக்கு இடையிலான போட்டியாக இன்றைய ஆட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
கோவை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், திருச்சி பவுலர் நடராஜன் ஆகியோருக்கு இடையிலான போட்டியாக இன்றைய ஆட்டம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

லைக்கா கோவை கிங்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் 2இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெறும்பட்சத்தில் முதல் இடத்தை பிடிக்கலாம். அதேவேளையில் இந்த இடத்துக்கான ரேசில் தற்போது இருக்கும் திண்டுக்கல் டிராகன்ஸ், மூன்றாவது இடத்தில் இருக்கும் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் போட்டியாக உள்ளது.

லைக்கா கோவை கிங்ஸ் அணி, திருப்பூர், சேப்பாக் ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றிருக்கும் நிலையில், நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

பால்சி திருச்சி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பெரிய அளவில் ஜொலிக்காத அணியாக இருந்து வருகிறது திருச்சி அணி. எனவே இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை விளையாடியிருக்கும் திண்டுக்கல், சேலம் அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.

அத்துடன் இதுவரை கோவை - திருச்சி இடையே நடைபெற்ற 5 மோதல்களில், அனைத்து போட்டிகளிலும் கோவை அணியே வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

கோவை அணியில் நட்சத்திர வீரர்களாக சாய் சுதர்சன், ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர். அதேபோல் திருச்சி அணியிலும் யார்க்கர் மன்னன் நடராஜன் ஸ்டார் வீரராக உள்ளார்.

கோவை அணியை பொறுத்தவரை முதல் இடத்தை பிடிக்கவும், திருச்சி அணி முதல் வெற்றியை பெற போராடும் விதமாக இன்றயை போட்டி அமையக்கூடும்.

WhatsApp channel

டாபிக்ஸ்