தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Kerala Story: சர்ச்சையோ சர்ச்சை.. கேரளா ஸ்டோரி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

The Kerala Story: சர்ச்சையோ சர்ச்சை.. கேரளா ஸ்டோரி படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
May 08, 2023 12:56 PM IST

சர்ச்சைகளில் சிக்கிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூல் தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன

The Kerala Story
The Kerala Story

ட்ரெண்டிங் செய்திகள்

கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல்போனதையொட்டிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம், அவர்கள் அனைவரும் இஸ்லாமிய ஆண்களால் முளைச்சலவை செய்யப்பட்டு, காதல் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்ளப்பட்டு மதம் மாறி எப்படி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவரவாத மிஷன்களில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது. இந்தத்திரைப்படத்தை சுதிப்டோ சென் இயக்கியுள்ளார்.

இந்தப்படம் கடந்த மே 5 ஆம் தேதி வெளியானது. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதா ஷர்மா நடித்துள்ளார். இந்து செவிலியரான அவர் முஸ்லிமாக மாறியுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. அவருடன், யோகித்தா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும்தான் இந்தப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத்திரைப்படத்திற்கு கேரளா மாநில முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என அறிவித்ததை படம் சொன்ன தேதியில் வெளியானது.

தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மால்களில் உள்ள தியேட்டர்களில் மட்டும் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்னபிற திரையரங்களும் இந்தப்படத்தை திரையிட மாட்டோம் என உறுதியளித்தது. இப்படி சர்ச்சைகளால் சுற்றிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வசூல் தொடர்பான விபரங்களை இங்கு பார்க்கலாம்.

கேரளா ஸ்டோரி திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியான நிலையில் இரண்டு நாட்களில் அந்தத்திரைப் படமானது 20 கோடி வசூல் செய்தது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று மட்டும் இந்தத்திரைப்படம் 16.50 கோடி ரூபாயை வசூல் செய்து இருக்கிறது. இந்த வசூலானது முன்னதாக இரண்டு நாட்கள் வசூல் செய்த தொகையில் பாதிக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக வார இறுதியில் இந்த திரைப்படம் 35. 75 கோடி ரூபாயை வசூல் செய்து இருக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்