Thalapathy Vijay: ‘இடது கையில மட்டுமில்ல…முகத்துலயும்’ - வட்டம் போட்டு உச்சுக்கொட்டும் ரசிகர்கள்! - ஆதாரம் உள்ளே!
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் விஜய் கையில் காயம் இருந்தது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, படத்திற்காக விஜய் இப்போதும் இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்பதை குறிக்கும் வகையில், அவரது ரசிகர்கள், அதனை சமூகவலைதளங்களில் ஷேர் செய்திருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, விஜய், த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கில்லி திரைப்படம் ரீ ரிலிஸ் ஆனது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்தப்படம், மூன்று நாட்களில் 15 கோடி வரை வசூல் செய்து, ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் ரத்னமும், விநியோகஸ்தரும், விஜயை நேரில் சென்று சந்தித்து மாலை அணிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.
இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் விஜய் கையில் காயம் இருந்தது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு, படத்திற்காக விஜய் இப்போதும் இவ்வளவு மெனக்கெடுகிறாரே என்பதை குறிக்கும் வகையில், அவரது ரசிகர்கள், அதனை சமூகவலைதளங்களில் ஷேர் செய்திருந்தனர்.
பெரும்பான்மையானோர், அவருக்கு வலது கையில் மட்டும் அடிபட்டு இருந்தது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்திருந்த நிலையில், இன்னும் சில ரசிகர்கள், அவரது முகம் மற்றும் இடது கையில் காயம் இருந்தது தொடர்பான புகைப்படங்களை ஜூம் செய்து பதிவிட்டு இருக்கின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’.இந்தப்படத்தின் போஸ்டர்கள் புத்தாண்டு மற்றும் பொங்கல் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது.
அதன் மூலம், நடிகர் விஜய் படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது உறுதியானது. புதியகீதைக்கு பின்னதாக, கிட்டதட்ட 20 வருடங்களுக்கு பிறகு விஜயின் இந்தத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான விசில் போடு தமிழ் புத்தாண்டு தின கிப்ஃட்டாக வெளியானது. ஆனால் அந்தப்பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, தாய்லாந்து, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடந்தது. தற்போது படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்று இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்து இருந்தார்.
முன்னதாக, படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்த விஜய்க்கு அங்கிருந்த ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு அளித்தனர்.
அங்கு ரசிகர்கள் முன்னிலையில் பேசிய அவர் , “உங்கள் வீட்டு பிள்ளையாக நீங்கள் என்னை பார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் மனசுல அப்படியே வாழ்ந்து விட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் உங்க விஜய்தான்
தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. இந்த ஜென்மம் மட்டுமல்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், நான் உங்க விஜய்தான். உங்களுடைய தளபதிதான். இந்த 32 வருஷத்துல என்ன ஒரு நடிகனா மட்டும் பார்க்காம, உங்க வீட்டுப்பிள்ளையா பார்த்தீங்க பாருங்க அது ரொம்ப ஆச்சரியாம இருக்கு.” என்று பேசினார்.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்
இந்தப்படத்தில் விஜயுடன் இணைவது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யுவன் ஷங்கர் ராஜா, “ தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் அப்டேட்டை நான் சொல்ல மாட்டேன். இந்த முறை நான் தெளிவாக இருக்கிறேன். பேச்சு இல்ல.... வீச்சுதான். நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று கொண்டிருக்கிறது” என்று பேசினார்.
நட்சத்திர பட்டாளம்:
இந்தப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். மேலும் துணை கதாபாத்திரங்களில் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, அஜ்மல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு கேப்டன் மில்லர் படத்தில் பணியாற்றிய கேமராமேன் சித்தார்த் நுனி கேமராமேனாக பணியாற்றுகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்