தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Exclusive: மண்டப வாடகை 40 லட்சம்; வைர நெக்லஸ் 10 லட்சம்; வெஜிடபுள் பிரியாணி விருந்து; சாப்பிடாமல் நின்ற விஜய்!

HT Exclusive: மண்டப வாடகை 40 லட்சம்; வைர நெக்லஸ் 10 லட்சம்; வெஜிடபுள் பிரியாணி விருந்து; சாப்பிடாமல் நின்ற விஜய்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 18, 2023 12:05 PM IST

தண்ணி அல்லது ஜூஸ் குடிச்சிருக்கலாம். எங்களையும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும்தான் சாப்பிட்டீர்களா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார்.

Thalapathy Vijay honors students: Exclusive informations from vijay makkal iyakkam Thalapathy Vijay Education Award Ceremony 2023
Thalapathy Vijay honors students: Exclusive informations from vijay makkal iyakkam Thalapathy Vijay Education Award Ceremony 2023

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் விஜய்!
நடிகர் விஜய்!

சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் மிகவும் பிரமாண்டமாக நடந்த இந்த நிகழ்வுதான் நேற்று தமிழ்நாடு முழுவதும் சென்சேஷன். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எங்கு பார்த்தாலும் விஜயும், விஜயின் ரியாக்‌ஷன்களுமே சர்வமையமாக இருக்கின்றன. கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விழாவில் அவ்வளவு நேரமும் மேடையிலேயே நின்று மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய்.

இந்த நிலையில் மாணவியருக்கு கொடுக்கப்பட்ட ஊக்கத்தொகை எவ்வளவு? நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சாப்பாடு என்ன? விஜய் என்ன சொன்னார்? உள்ளிட்ட விவரங்களை விஜய் தரப்பில் ஒருவரிடம் விசாரித்தேன்.

நெகிழ்ந்த மாணவர்கள்!
நெகிழ்ந்த மாணவர்கள்!

“ 234 தொகுதியில இருந்து ஒவ்வொரு தொகுதிக்கும் 6 பேர் வீதம் அப்படின்னு மொத்தம் 1404 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டு இருந்தாங்க. எல்லாருக்குமே 5000 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுச்சு.

மூன்று மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் தலா 25,000 கொடுக்கப்பட்டுதா சொல்றாங்க. 600க்கு 600 மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடிச்ச நந்தினிக்கு தளபதி வைர நெக்லஸ் கொடுத்தாரு. அந்த நகையோட விலை 10 லட்சம் இருக்கலாம்னு சொல்றாங்க. எல்லாரும் வந்து போக வசதியா பிரமாண்டமான மண்டபம் புக் செய்யப்பட்டிருந்துச்சு. அந்த மண்டபத்துக்கான வாடகையே 40 லட்சம் இருக்கும்னு சொல்றாங்க.

விஜய் வருகை!
விஜய் வருகை!

தளபதி காலையில 10.30 மணிக்கெல்லாம் வந்துட்டாரு. வந்த உடனே எல்லாரையும் பார்த்து கும்பிட்டார். மாணவர்கள் அருகில் உட்கார்ந்து போட்டோ எடுத்துக்கிட்டார். உடனே விழா தொடங்கப்பட்டுச்சு. உடனே சான்றிதழ்கள கொடுக்க ஆரம்பிச்சிட்டாரு.

நிகழ்ச்சி முடிய இரவு 12.15 ஆகிருச்சு. அவ்வளவு நேரமும் தளபதி நின்னுக்கிட்டேதான் இருந்தாரு. இடையில சில நிமிடங்கள் மட்டும் போய்ட்டு உடனே வந்துட்டாரு. அந்த இடைவெளியில அவர் சாப்பிட்டு இருக்க வாய்ப்பே கிடையாது.

முடியாமல் நின்ற நடிகர் விஜய்!
முடியாமல் நின்ற நடிகர் விஜய்!

தண்ணி அல்லது ஜூஸ் குடிச்சிருக்கலாம். எங்களையும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும்தான் சாப்பிட்டீர்களா? என்று கேட்டுக்கொண்டே இருந்தாரு. மதியம் சாப்பிடுவதற்கு வெஜிடபுள் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துச்சு. கூடவே சாப்பாடு, சாம்பார், ரசம், பாயாசம் என ஒரு கல்யாண வீட்டை விட தடபுடலான சாப்பாடு கொடுக்கப்பட்டுச்சு. 

மாலைக்குள்ள நிகழ்ச்சிய நிறைவு செய்ய திட்டமிட்டாங்க. ஆனால் முடிக்க முடியல.. அதனால மாலையும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுச்சு. சைவ சாப்பாட்டையே கொஞ்சம் வித்தியாசமா காலி ஃப்ளவர் கூட்டெல்லாம் வச்சி வேற மாறி ரெடி பண்ணிட்டாங்க.”  என்றார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்