Leo Thalapathy Vijay: வாரிசுக்கு வெறும் 2000; ஆனா லியோவுக்கு..இங்கிலாந்தில் தளபதி தாண்டம் - ஒர்க் அவுட்டான லோகேஷ் பிளான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Thalapathy Vijay: வாரிசுக்கு வெறும் 2000; ஆனா லியோவுக்கு..இங்கிலாந்தில் தளபதி தாண்டம் - ஒர்க் அவுட்டான லோகேஷ் பிளான்

Leo Thalapathy Vijay: வாரிசுக்கு வெறும் 2000; ஆனா லியோவுக்கு..இங்கிலாந்தில் தளபதி தாண்டம் - ஒர்க் அவுட்டான லோகேஷ் பிளான்

Kalyani Pandiyan S HT Tamil
Published Sep 10, 2023 11:38 AM IST

இங்கிலாந்தில் விஜய்யின் "லியோ" திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரும் சாதனை படைத்துள்ளது.

 விஜய்!
விஜய்!

"லியோ" திரைப்பட அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், லியோ படத்தின் யூகே மற்றும் ஐரோப்பாவிற்கான திரையரங்கு உரிமைகளைப் பெற்றுள்ளது. 

லியோ பட வெளியீட்டிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பே இந்த நிறுவனம் முன்பதிவுகளை தொடங்கியது.  இதன் மூலம் "லியோ" திரைப்படம் இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாக முன்பதிவுகளைத் தொடங்கிய முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது.

முன்னதாக அஹிம்சா என்டர்டெயின்மென்ட்  விஜயின் "பீஸ்ட்"  திரைப்படத்தை அமெரிக்காவில் விநியோகம் செய்தது. பீஸ்ட் படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், அமெரிக்க நாட்டில் விஜயின் அதிக வசூலையும் பெற்றது.

 இதே போன்று, இங்கிலாந்தில் அவர்கள் வெளியிட்ட "வாரிசு" அதே மைல்கல்லை எட்டியதோடு, இங்கிலாந்தில் தளபதி விஜய்க்கு மற்றொரு சிறந்த வருவாயை ஈட்டி காட்டி சாதனை படைத்தது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இது குறித்து கூறும்போது, “ லியோ படத்திற்கு முதல் நாளிலேயே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா உள்ளிட்ட பலமான கூட்டணியால், மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ரசிகர்கள் மிகப்பெரும் ஆதரவை தந்து வருகிறார்கள். இங்கிலாந்தில் இந்தியப் படமொன்றின் மிகப்பெரிய வெளியீடாக இப்படத்தை  உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.” என்று 

இந்த நிறுவனம் முன்னதாக  "மாமன்னன்", "போர் தொழில்", "கோப்ரா",  “நானே வருவேன்”, “வெந்து தணிந்தது காடு”, “காத்து வாக்குல ரெண்டு காதல்”, “லவ் டுடே”, மற்றும் “விடுதலை பார்ட் 1” போன்ற படங்களில் வெளிநாட்டில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.