Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் - ஏஆர் முருதாஸ் படத்தால் வந்த சிக்கல் - தயாரிப்பாளர் சங்கத்துக்கு முக்கிய கோரிக்கை
சிவகார்த்திகேயன் பிறந்தநாளான இன்று அவரது படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைக்கு பின் தீர்வு காணப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது. கடந்த இரு நாள் நாள்களுக்கு முன்னர் இந்த படம் பூஜையுடன் தொடங்கியது.
இதையடுத்து படத்தில் வெளி மாநில அவுட்டோர் யுனிட் பயன்படுத்து நடைபெற்று வருகிறது. இதனால் உள்ளூர் சினிமா தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் படத்தில் வெளி மாநில அவுட்டோர் யுனிட்களை பயன்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, உள்ளூர் அவுட்டோர் யுனிட் சங்கத்தினர் சினிமா திரைப்படங்களுக்கும், சீரியல்களுக்கும் அவுட்டோர் யுனிட் ஒத்துழைப்பை இன்று முதல் வழங்கப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்புகளும் பாதிக்கும் சூழல் உருவாகியது. இதன்பின்னர் தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராமசாமி, அவுட்டோர் யுனிட் சங்கத்தினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் நேற்று நள்ளிரவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே பேச்சுவார்த்தியின்போது, பிற மாநிலங்களில் நடைபெறும் படப்பிடிப்புகளில், தமிழ் பணியாளர்கள் வேலை செய்வதற்கு அனுமதிப்பது இல்லை எனவும், தமிழ்நாட்டில் மட்டும் அனைத்து மாநில பணியாளர்களும் வேலை செய்கிறார்கள் எனவும் அவுட்டோர் யுனிட் சங்கத்தினர் வெளிப்படுத்தினர்.
தமிழ் படங்களுக்கு தமிழ் பணியாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று பெப்சியுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பெப்சியும் இதன் முழு விவரம் அறியாமல் வெளி மாநில அவுட்டோர் யுனிட்டுக்கு தமிழ் பணியாளர்களை அனுப்பியுள்ளது. தயாரிப்பாளர் சங்கம் சில நாள்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனவும், போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டதால் அவுட்டோர் யுனிட் சங்கத்தினர் போராட்டம் வாப்ஸ் பெறப்பட்டுள்ளது.
இன்று வழக்கம்போல் அனைத்து திரைப்பட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டை சேர்ந்த அவுட்டோர் யுனிட் சங்கத்தினர் எழுதிய கடிதத்தில், "ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்துக்கும் வெளி மாநில அவுட்டோர் யுனிட்டை பயன்படுத்துவதால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பிப்ரவரி 16 முதல் எந்த வித படப்பிடிப்புகளுக்கும் ஒத்துழைப்பு கொடுக்கபோவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம், சிவகார்த்திகேயன் - ஏர்ஆர் முருகதாஸ் படத்துக்கு தாஹிர் என்கிற வெளி மாநில அவுட்டோர் யுனிட் பயன்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ் திரைப்படங்களுக்கு வெளி மாநில அவுட்டோர் யுனிட்களை பயன்படுத்துவதில்லை என பல கட்ட பேச்சுவார்த்தையின் முடிவுக்கு பின் தாங்கள் அறிவித்துள்ளீர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
வெளிமாநில மேற்கூறப்பட்டிருக்கும் தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்துவது அவுட்டோர் யுனிட் உரிமையாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சல் மற்றும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, இங்கு இருக்கும் அவுட்டோர் யுனிட்களின் தொழில் நலன் காக்க நிரந்தர தீர்வுக்கு வழிவகை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டிருந்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்