தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Siva Narayana Moorthy Passed Away: நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்

Siva Narayana Moorthy passed away: நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்

Karthikeyan S HT Tamil
Dec 07, 2022 11:54 PM IST

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் சிவ நாரயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

 நகைச்சுவை நடிகர் சிவ நாரயணமூர்த்தி
நகைச்சுவை நடிகர் சிவ நாரயணமூர்த்தி

ட்ரெண்டிங் செய்திகள்

விவேக் மற்றும் வடிவேல் அணியில் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமான காமெடியனாக அறியப்பட்டார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் முகம் காட்டி வந்த சிவ நாராயணமூர்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் உட்பட பலரின் படங்களில் நடித்திருக்கிறார்.

200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்த சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் இன்று (டிச.7) இரவு மரணமடைந்துள்ளார். இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். மனைவி பெயர் புஷ்பவல்லி.

மறைந்த சிவ நாரயணமூர்த்தியின் இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் நாளை மதியம் நடைபெறவுள்ளது. சிவ நாரயண மூர்த்தியின் இறப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவருடைய மறைவு செய்தியை கேள்வி பட்டு தமிழ் திரையுலகத்தினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்