தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Celebrities Favorite: ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களின் ஃபேவரைட் உணவு

Celebrities Favorite: ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களின் ஃபேவரைட் உணவு

I Jayachandran HT Tamil
Apr 26, 2023 11:34 AM IST

ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களின் ஃபேவரைட் உணவுகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

கோலிவுட் பிரபலங்கள்
கோலிவுட் பிரபலங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில வருடங்களுக்கு முன்பு சுத்த சைவமாக மாறிவிட்டார். அவர் அசைவம் சாப்பிட்ட காலத்தில் அவருக்கு மிகவும் பிடித்த உணவு ஆப்பம், ஆட்டுக்கால் பாயா, மட்டன், சிக்கன் கிரேவி போன்றவை.

கமல்ஹாசன்

கமல்ஹாசனுக்கு சர்க்கரை சேர்க்காத பிளாக் காபி என்றால் உயிர். அதே போல் சாப்பாட்டில் மட்டன் கறி மற்றும் சிக்கன் கறி என்றால் மிகவும் பிடிக்குமாம்.

விஜய்

நடிகர் விஜய்யுக்கு மிகவும் பிடித்தமான உணவு தோசை மற்றும் மட்டன் கறி. அம்மா ஷோபா செய்யும் மட்டன் பிரியாணியும் அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.

அஜித்

நடிகர் அஜித் பல வகையான உணவுகளை ருசி பார்க்க கூடியவர். அதிகளவும் பயணம் மேற்கொள்வதால் தான் செல்லும் ஊரில் இருக்கும் உணவுகளை மிஸ் செய்யாமல் ட்ரை செய்து பார்க்கும் பழக்கம் கொண்டவர்.

தனுஷ்

நடிகர் தனுஷ் சைவம் சாப்பிடக்கூடியவர். அவருக்கு தென்னிந்திய உணவுகள் என்றல் மிகவும் பிடிக்கும். பேப்பர் தோசை, சாம்பார், வத்தக்குழம்பு ஆகியவை தனுஷின் ஃபேவரைட்.

சூர்யா

நடிகர் சூர்யாவுக்கு தயிர் சாதம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதே போல் அவர் தோசை விரும்பியும் கூட.

கார்த்தி

கார்த்திக்கு நம்ம ஊர் உணவான இட்லி, சாம்பார், வடை, சட்னி ஆகியவை ஆல் டைம் ஃபேவரெட்.

ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் டயட்டில் அதிக கவனம் எடுத்து கூடியவர். ஆனால் தென்னிந்திய சாம்பார் வகைகளை பார்த்ததும் ஒரு பிடி பிடிப்பாராம்.

காஜல் அகர்வால்

மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால், சென்னை வந்தால் கட்டாயம் சாப்பிடக்கூடிய டிஷ் இட்லி, தோசை, சாம்பார், பொங்கல், பூரி, பிரியாணி. தென்னிந்திய சமையல் மிகவும் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயாவுக்கு சப்பாதி மற்றும் சிக்கன் கறி என்றால் மிகவும் பிடிக்குமாம்.

பிரகாஷ் ராஜ்

பன்முக நடிகர் பிரகாஷ் ராஜூக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணி. சிக்கன், மட்டன் இரண்டையும் விரும்பி சாப்பிடுவாராம்.

நயன்தாரா - விக்னேஷ்

திருமணத்துக்கு பிறகு இருவரும் அடிக்கடி விரும்பி செல்லும் ஹோட்டல் ஈரோடு அம்மன் மெஸ். இங்கு இருக்கும் ஜப்பான் சிக்கன் இருவருக்கும் மிகவும் பிடித்தமான உணவு.

சமந்தா

சென்னை பெண்ணான சமந்தாவுக்கு நம்மூர் இட்லி சாம்பார் மிகவும் பிடிக்குமாம். அதற்கு பின்பு ஹதராபாத் பிரியாணியையும் விடும்பி சாப்பிடுவாராம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்