தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Str 48: இது நிஜமா.. சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை இவரா?

STR 48: இது நிஜமா.. சிம்புவுக்கு ஜோடியாகும் நடிகை இவரா?

Aarthi V HT Tamil
May 14, 2023 12:12 PM IST

சிம்புவுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் Sநடிக்கவுள்ளார்.

சிம்பு
சிம்பு

ட்ரெண்டிங் செய்திகள்

வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த சரித்திர படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து புதிய கெட்-அப்பில் நடித்து வருகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் படம் தயாராகி வருகிறது.

சிம்புவின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இது இருக்கும் என்று தெரிகிறது. எஸ்.டி.ஆர் 48 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சிம்புவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எஸ்.டி.ஆர் 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோயின் யார் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே, சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டணி உறுதியானால், சிம்புவுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கும் முதல் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை தீபிகா படுகோனே இதற்கு முன்பு கோச்சடையான் என்ற தமிழ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் . தீபிகா படுகோனே நடித்த கடைசி படம் பதான். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா நடித்துள்ளார்.

இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது மட்டுமில்லாமல் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதற்குப் பிறகு தீபிகா படுகோன் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படம் தற்போது தயாராகி வருகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்