தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  44 Years Of Dharma Raja: ஆக்‌ஷன் திலகமாக சிவாஜி கணேசன் - ஜப்பானில் வில்லன் வேட்டை! எம்ஜிஆர் ஸ்டைல் பக்கா கமர்ஷியல் படம்

44 years of Dharma Raja: ஆக்‌ஷன் திலகமாக சிவாஜி கணேசன் - ஜப்பானில் வில்லன் வேட்டை! எம்ஜிஆர் ஸ்டைல் பக்கா கமர்ஷியல் படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 26, 2024 05:00 AM IST

கடவுள் பக்தி, குடும்ப செண்டிமெண்ட், அதிரடி ஆக்‌ஷன் என எம்ஜிஆர் பாணியலான பக்கா கமர்ஷியல் கதையில் சிவாஜி கணேசன் தனது அதிரடியான நடிப்பால் முத்திரை பதித்த படம் தர்மராஜா. படத்தில் குதிரை பைட், கார் பைட், பைக் பைட், கிளைமாக்ஸில் பாராசூட்டில் கூட பைட் செய்து சிவாஜி கணேசன் பின்னி பெடலெடுத்திருப்பார்.

தர்மராஜா படத்தில் சிவாஜி கணேசன்
தர்மராஜா படத்தில் சிவாஜி கணேசன்

ட்ரெண்டிங் செய்திகள்

கேஆர் விஜயா, தேங்காய் சீனிவாசன், மனோரமா, கீதா, மேஜர் சுந்தரராஜன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தயாரிப்பாளரும், நடிகருமான பாலாஜி வில்லனாக நடித்திருப்பார்.இதுதான் அவரது கடைசி படமாகவும், நெகடிவ் ரோலில் நடித்த படமாகவும் உள்ளது.

எம்ஜிஆர் பாணியலான கதை

பொதுவாகவே சிவாஜி கணேசன் படங்கள் என்றாலே நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக கதை, திரைக்கதை, கதாப்த்திரங்களின் வடிவமைப்பானது இருக்கும். ஆனால் இந்த படத்தில் கதை எம்ஜிஆர் படங்களை போல் அதிரடி ஆக்‌ஷன் பாணியில் அமைந்திருக்கும்.

அதேபோல் சிவாஜியின் கதாபாத்திரமும் கடவுள் பக்தி, தங்கை செண்டிமெண்ட், ஹீரோயினுடன் காதல், வில்லனை பழிவாங்குதல் என பக்கா கமிர்ஷியல் பட ஹீரோ பாணியில் இருக்கும். இந்த கதாபாத்திரத்திலும் தனது அற்புத நடிப்பால் மேஜிக் நிகழ்த்தியிருப்பார் சிவாஜி கணேசன்.

வழக்கமான சிவாஜி படங்களில் இருந்து மாறுபட்டு இதில் சண்டை காட்சிகள் அதிரடியாகவும், அதிகமாகவும் இடம்பிடித்திருக்கும். அதாவது குதிரை பைட், கார் பைட், பைக் பைட், கிளைமாக்ஸில் பாராசூட்டில் கூட பைட் என பல்வேறு விதமான சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருப்பார்,

படத்தின் கதை கிராமத்தில் தொடங்கி, நகரம் சென்று, ஜப்பானில் உள்ள டோக்கியாவில் வில்லனை வேட்டையாடும் விதமாக முடிந்திருக்கும். ஜப்பானின் அழகை, வாழ்வியல் முறையை கேமராக்களில் பதிவு செய்த படமாக தர்ம ராஜா உள்ளது.

சிவாஜி கணேசன் பாரம்பரியமாக சேவை செய்யும் கோயிலில் தர்மகாத்தா மேஜர் சுந்தர்ராஜன் உதவியுடன் சிலையை தி்ருடிகிறார் பாலாஜி. சிவாஜியின் தங்கையையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிறார்.

சிலையை மீட்கவும், தங்கை வாழ்க்கை சீரழித்த பாலாஜியை, சிவாஜி கணேசன் பழிவாங்குவதும் தான் படத்தின் கதை. படத்தின் தொடக்கம் முதலே சிவாஜி - பாலாஜி இடையே பூனை-எலி ரேஸ் நடக்க கிளைமாக்ஸ் வரை அது தொடர்கிறது. இறுதியில் சிவாஜி ஜெயிக்கும் கிளிசே கதாயானாலும் ஆக்‌ஷன், கொஞ்சம் கவர்ச்சி, ஜப்பானில் கதைகளம் என ரசிக்க வைக்கும் விதமாக ஜனரஞ்சக பாணியில் படத்தை உருவாக்யிருப்பார்கள்

எம்எஸ்வி - கண்ணதாசன் காம்போ

கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் ரசிக்கும் விதமாக அமைந்திருந்தன. ஒரேயொரு பாடலை ஜப்பான் மொழியில் ராக் மியூசிக்கில் அந்த காலகட்டதிலேயே இசையமைத்திருப்பார் எம்.எஸ்.விஸ்வநாதன்

சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு ட்ரீட்

பக்கா கமர்ஷியல் பாணியில் உருவாகியிருந்த தர்மராஜா சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த படம் இருந்தது. இதனால் 100 நாள்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வசூலையும் குவித்து ஹிட்டானது. சிவாஜி நடிப்பில் அதிரடி படமாக இருந்து வரும் தர்மராஜா வெளியாகி இன்றுடன் 44 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்