தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Simbu, Hansika: மாதங்கள் மட்டுமே நீடித்த காதல்.. ஹன்சிகாவுக்காக, சிம்பு இத்தனை கோடி செலவு செய்தாரா?

Simbu, Hansika: மாதங்கள் மட்டுமே நீடித்த காதல்.. ஹன்சிகாவுக்காக, சிம்பு இத்தனை கோடி செலவு செய்தாரா?

Aarthi Balaji HT Tamil
Apr 26, 2024 06:39 AM IST

Simbu, Hansika Love Story: சிம்பு மற்றும் ஹன்சிகாவின் காதல் முடிவுக்கு வந்தாலும், அவர்கள் காதலிக்கும் போது ஹாசிகாவுக்காக, சிம்பு சுமார் ஆறு கோடி ரூபாய் மேல் செலவு செய்தது இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிம்பு மற்றும் ஹன்சிகா
சிம்பு மற்றும் ஹன்சிகா

ட்ரெண்டிங் செய்திகள்

என்னதான் விமர்சனம் வந்தாலும் ஒரே ஒரு மாஸ் பெர்ஃபார்மன்ஸ் போதும், சிம்புவுக்காக தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது. மாநாட்டிற்குப் பிறகு சிம்பு தனது கேரியருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முன்னேறி வருகிறார்.

அவர் ஒரு சர்ச்சைக்குரிய நடிகராக எவ்வளவு பிரபலமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. சிம்பு குழந்தையில் இருந்து படங்களில் நடிகராக  நடித்து வருகிறார். அவரின் காதல் உறவுகள் மிகவும் விவாதிக்கப்பட்ட ஒன்றாகும். 41 வயதான சிம்பு இதுவரை பலமுறை காதலித்து உள்ளார், ஆனால் அவர்கள் யாரும் திருமணத்திற்கு வழிவகுக்கவில்லை.

எனவே தமிழில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர்கள் பட்டியலில் சிம்புவின் இடம் முதலிடத்தில் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை சிம்பு காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. பிரிந்த பிறகு இருவரும் தொலைபேசியில் பேசிய ஆடியோ கிளிப்புகள் வெளியாகின. 

சிம்பு வல்லவன் படத்தில் நடித்த பிறகு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்தார். அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததும் பெரிய செய்தியாக இருந்தது. ஆனால் ஜாதகம் உள்ளிட்ட பிரச்னைகள் இருவரையும் திருமணம் செய்து கொள்ள தடையாக இருந்தது. இதனால் சிம்புவும், நயன்தாராவும் பிரிந்தனர். முன்னதாக ஒரு பேட்டியில் பேசிய சிம்பு, நயன்தாராவை எப்போதும் மிஸ் செய்வதாக கூறினார்.

பின்னர், சிம்பு தனது கேரியரில் அதிக கவனம் செலுத்தி வந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானியுடன் வால் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார், மேலும் அந்த நடிகையை காதலித்து வந்தார். இருவரும் தங்கள் உறவு வலுவடைந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, சமூக ஊடகங்கள் மூலம் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தங்கள் ரசிகர்களுக்கு மறைமுகமாக தெரிவித்தனர். 

ஆனால் அந்த அறிவிப்பு வந்தவுடன் இருவரும் பிரிந்தனர். சிம்பு படம் வெளியாவதில் பல பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம் அது. ஒரு பேச்சில் ஹன்சிகா பற்றி சிம்பு கூறியது தான் காதலித்த பெண் கூட தனக்கு பிரச்னை வந்த போது தன்னை விட்டு பிரிந்து சென்றார் என பேசியது வைரலாக பரவியது. அவர்களின் காதல் சில மாதங்கள் மட்டுமே நீடித்தது.

ஆனால் சிம்புவோ, ஹன்சிகாவோ இருவரும் பிரிந்ததற்கான காரணத்தை வெளியிடவில்லை. இருப்பினும், ஹன்சிகா மோத்வானி தனது திருமண வீடியோவில், சிம்புவுடனான தனது காதல் பற்றி பேசும்போது தனது முதல் காதலை மறக்க பத்து வருடங்களுக்கும் மேலாகிவிட்டது என்று கூறியிருந்தார். 

சிம்பு மற்றும் ஹன்சிகாவின் காதல் முடிவுக்கு வந்தாலும், அவர்கள் காதலிக்கும் போது ஹாசிகாவுக்காக, சிம்பு சுமார் 6 கோடி ரூபாய் செலவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் சிம்பு இதை பற்றியோ, ஹன்சிகாவை பற்றியோ தவறாக பேசியதில்லை. அவர்கள் இன்னும் நண்பர்கள். ஹன்சிகா தனது தொழில் பங்குதாரரும் நண்பருமான சோஹைல் கதுரியாவை மணந்து உள்ளார்.

இருவரும் டிசம்பர் 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான ஹன்சிகா, இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து உள்ளார். ஹன்சிகா பாரம்பரியமாக வணிக குடும்பத்தை சேர்ந்தவர். நடிகரும், இயக்குனருமான டிஆர் ராஜேந்திரனின் மூத்த மகன் சிம்பு. குழந்தையாக நடிக்க ஆரம்பித்த சிம்பு, நாற்பத்தொன்றில் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார். சிம்புவின் திருமணம் என்பது ரசிகர்களின் மிகப்பெரிய கனவு.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்