தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Str48: வேகமெடுக்கும் Str48.. பரபரமோடில் சிம்பு.. ஷூட்டிங் எப்போது - வந்தாச்சு அப்டேட்!

STR48: வேகமெடுக்கும் STR48.. பரபரமோடில் சிம்பு.. ஷூட்டிங் எப்போது - வந்தாச்சு அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 24, 2023 12:20 PM IST

சிலம்பரசன் நடிக்கும் 48 வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது

சிலம்பரசன்
சிலம்பரசன்

ட்ரெண்டிங் செய்திகள்

அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தாய்லாந்திற்கு சென்ற சிலம்பரசன் அங்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து லண்டன் சென்ற சிலம்பரசன் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிகிறது. பீரியாடிக்( ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம்) படமாக உருவாகும் இந்தப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இன்னும் காலம் எடுக்கும் என சொல்லப்படுகிறது.

 

காரணம் அந்தக்கதை அத்தகைய முந்தைய உழைப்பை கேட்கிறதாம். அண்மையில் சிலம்பரசனும் படக்குழுவும் சென்னையில் உள்ள ஒரு ஸ்டியோவில் லுக் டெஸ்ட் செய்திருக்கிறார்கள். ஆகையால் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஃப்ரீ புரடொக்‌ஷன் பணிகள் முடிந்ததும் நவம்பரில் படக்குழு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

சிலம்பரசனின் 48 ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தபடம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த கதையானது நடிகர் ரஜினிகாந்திற்கு சொல்லப்பட்ட கதை என்றும் பல்வேறு காரணங்களால் அது நடக்காத நிலையில் சிலம்பரசன் நடிக்க இருப்பதாக சொல்லபடுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்