Sivakarthikeyan: என்ன ஆரம்பிக்கலாமா?.. ஏ.ஆர்.முருகதாஸ் - சிவா இணையும் படம்! - என்ன ஜானர் தெரியுமா?-shooting of sivakarthikeyan next directed by ar murugadoss has started with a ritual pooja ceremony - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: என்ன ஆரம்பிக்கலாமா?.. ஏ.ஆர்.முருகதாஸ் - சிவா இணையும் படம்! - என்ன ஜானர் தெரியுமா?

Sivakarthikeyan: என்ன ஆரம்பிக்கலாமா?.. ஏ.ஆர்.முருகதாஸ் - சிவா இணையும் படம்! - என்ன ஜானர் தெரியுமா?

Kalyani Pandiyan S HT Tamil
Feb 15, 2024 12:06 PM IST

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம், இப்போது படப்பிடிப்பில் !!

சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன்!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில்,  நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாகத் துவங்கியுள்ளது. படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொள்ள நேற்று பூஜை  நடந்த நிலையில், இன்று படப்பிடிப்பு துவங்கி இருக்கிறது. 

ஆக்சன் கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாக இருக்கும் இந்தப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலீஷ் தோற்றத்தில் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கன்னட நடிகை ருக்மணி வஸந்த் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவீஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக, இப்படத்தைத் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்க, அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக்காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார்.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கிப் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும்  தொழில் நுட்ப கலைஞர்களின் முழு  விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.