தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigboss7: 'மானம் போகுது. என் மகளை அனுப்புங்க’- பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற ஐஷூவின் தாய், தந்தை

BigBoss7: 'மானம் போகுது. என் மகளை அனுப்புங்க’- பிக்பாஸ் வீட்டுக்கு சென்ற ஐஷூவின் தாய், தந்தை

Marimuthu M HT Tamil
Nov 04, 2023 10:30 AM IST

பிக்பாஸ் செட்டுக்குள் நுழைந்த ஐஷுவின் பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஐஷுவின் செயலால் அதிர்ந்த குடும்பம்..
ஐஷுவின் செயலால் அதிர்ந்த குடும்பம்..

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் இந்த சீசனில் இரண்டு காதல் ஜோடிகள் உருவாகியுள்ளனர். ரவீனா - மணி ஆகியோர் காதல் ஜோடியாக இருப்பது ஆரம்பத்திலேயே வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டது. அதன்பின் நிக்சன் மற்றும் ஐஷு ஜோடி தான் இணையவுலகில் ஹிட்டடித்த காதல் ஜோடி.

டான்ஸர் ஆகும் கனவில் பிக்பாஸ் சீசன் 7 வீட்டிற்குள் நுழைந்த ஐஷு, கானா மற்றும் ராப் பாடகரான நிக்சன் மேல் காதலில் விழுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து சமூக வலைதளத்தில் வைரலான ஒரு வீடியோவில் ஐஷு, கண்ணாடிக்குள் இருக்கும் நிக்சனைப் பார்க்க வருகிறார். பின், கண்ணாடிக்கு அடுத்தமுனையில் இருக்கும் நிக்சனை கிஸ் அடிக்க முயற்சிக்கிறார். ஆனால், கண்ணாடி தடுக்கிறது. பிக் பாஸ் சீசன்களிலேயே இது ரொமான்டிக் ஆன மொமன்ட் ஆகப் பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் இதை டிவி வழியாகப் பார்த்த ஐஷூவின் பெற்றோர் நொந்து போயுள்ளனர். மேலும், ஐஷுவின் பெற்றோர் பிக்பாஸ் வீடு இருக்கும் சென்னை- பூந்தமல்லி இவிபி செட்டுக்கே சென்று, தங்கள் மகளை எலிமினேட் செய்து வெளியில் அனுப்புங்கள் என்று கெஞ்சியுள்ளனர். மேலும் தங்களின் குடும்ப மானம் காற்றில் பறப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். உடனே, நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் ஐஷுவின் பெற்றோரிடம் சமாதானம் பேசியுள்ளனர். மேலும் இந்த தகவலை தாங்களே சொல்லும் விதத்தில் சொல்லிவிடுவதாகவும் கூறி,  எந்தவொரு எமர்ஜென்சிகாரணமும் இல்லாமல் வெளியில் அனுப்பமுடியாது என்றும், தங்களது ஒப்பந்தத்தைக் காட்டியுள்ளனர். 

இதனால், வேறு வழியில்லாமல், அவ்விடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர், ஐஷுவின் பெற்றோர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

IPL_Entry_Point