தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: 'காதல் குறையாத அஜித் - ஷாலினி ஜோடி' - சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ

Ajith Kumar: 'காதல் குறையாத அஜித் - ஷாலினி ஜோடி' - சோசியல் மீடியாவை கலக்கும் போட்டோ

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 25, 2023 11:20 AM IST

23 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ஷாலினி கணவர் அஜித்துடன் காதலோடு கட்டி அணைத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அஜித் - ஷாலினி ஜோடி
அஜித் - ஷாலினி ஜோடி

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு சில சினிமா பிரபல ஜோடிகள் மட்டும் மக்கள் மத்தியில் மிகவும் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறார்கள். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உச்ச நடிகர்களில் கொடிகட்டிப் பறப்பவர் நடிகர் அஜித்குமார். இவரும் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.

தற்போது வரை அன்யோன்யமாக வாழ்ந்து வரும் இந்த தம்பதி ரசிகர்கள் மத்தியில் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அமர்க்களம் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அஜித் குடும்பத்தில் அவருடைய காதலுக்கு ஒப்புதல் வழங்கினாலும், ஷாலினி குடும்பத்தில் இவர்கள் காதலுக்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பல சிக்கல்களுக்கு ஷாலினி குடும்பத்தினர் இவர்கள் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளனர். அதற்குப் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி அன்று காதல் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கையில் இணைந்தனர்.

இந்த நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இன்றுடன் திருமணமாகி இவர்களுக்கு 23 ஆண்டுகளாகின்றன. ஆனால் இருவருக்கும் அன்பு இன்று வரை குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனக் கூறலாம். சமீபத்தில் நடிகை ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்தார். அவ்வப்போது அழகிய புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.

அந்த வகையில் இன்று அஜித் குமார் - ஷாலினி தம்பதியின் 23 ஆம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, ஷாலினி தனது கணவர் அஜித் கண்ணத்துடன் கண்ணம் வைத்து இறுக்கமாகக் கட்டிப்பிடித்து இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதே சமயம் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்கள் முழுவதும் வாழ்த்துக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்