தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shakeela Relationship: முதல் உடலுறவு யாருடன்? - பழைய ரகசியத்தை உடைத்த ஷகிலா

Shakeela Relationship: முதல் உடலுறவு யாருடன்? - பழைய ரகசியத்தை உடைத்த ஷகிலா

Aarthi V HT Tamil
Aug 14, 2023 11:33 AM IST

நடிகை ஷகிலா முதல் முறை உடலுறவு ரகசியம் பற்றி பேசினார்.

ஷகிலா
ஷகிலா

ட்ரெண்டிங் செய்திகள்

90களில் மலையாள திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ஷகிலா . இவர் நடித்த படங்கள் கேரளாவில் மாபெரும் வெற்றி பெற்றது. மோகன் லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இவரின் படத்துடன் மோதும்.

ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஷகிலாவுக்கு மலையாளத் திரையுலகம் தடை விதித்ததால் அவர் தமிழில் எண்டரி கொடுத்தார். பின்னர் கிளாமர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகிலா, தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

நடிகை ஷகிலாவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற ஷகிலா, தனது சமையல் திறமையால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த ஷகிலா இரண்டாம் இடம் பிடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் இமேஜ் அடியோடு மாறியது.

குக் வித் கோமாலிக்குப் பிறகு ஷகிலா யூடியூப் சேனலில் சர்ச்சைக்குரிய பிரபலங்களின் நேர்காணல் செய்து தொகுத்து வழங்கி வருகிறார் . அந்த வகையில் சமீபத்தில் இவரிடம் நீங்கள் உடலுறவு வைத்தது உண்டா? என கேட்டு உள்ளனர். அதற்கு அவர் எதற்கும் யாருக்கு பயப்படாமல் தைரியமாக, வெளிப்படையாக பதிலளித்தார். ஷகிலா, தனது தோழரான பால் ரிச்சர்டுடன் முதல் முறையாக உடலுறவு வைத்து கொண்டதாக தைரியமாக கூறினார். இவரது பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்