தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shaakuntalam Ott: இது என்ன சமந்தாவுக்கு வந்த சோதனை

Shaakuntalam OTT: இது என்ன சமந்தாவுக்கு வந்த சோதனை

Aarthi V HT Tamil
May 06, 2023 10:56 AM IST

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள சாகுந்தலம் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சாகுந்தலம்
சாகுந்தலம்

ட்ரெண்டிங் செய்திகள்

புராணக் கதையுடன் இந்தப் படத்தை திரையிட்டிருக்கிறார் இயக்குநர் குணசேகர். திரையரங்குகளில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. கதை, கிராபிக்ஸ், தயாரிப்பு மதிப்புகள் மற்றும் முன்னணி கதாபாத்திரங்களின் நடிப்பு ஆகியவை பரவலாக விமர்சிக்கப்பட்டன.

சுமார் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 20 கோடிக்கும் குறைவாகவே வசூலித்ததால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு கடும் நஷ்டத்தை சந்தித்தனர். தோல்விப் பேச்சால், திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்தில் இந்தப் படம் ஓடிடிக்கு வந்து உள்ளது.

அதன் படி சமந்தாவின் சாகுந்தலம் திரையரங்குகளில் வெளியான ஒரு மாதத்திற்குள் அதாவதது, மே 12 ஆம் தேதி அமேசான் ஃபிரைம் தளத்தில் வெளியாகிறது.

இப்படத்தின் ஓடிடி உரிமையை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பே சுமார் 20 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காளிதாசனின் அபிஞான சகுந்தலத்தை மையமாக வைத்து இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். இதில் சகுந்தலாவாக சமந்தாவும், துஸ்யந்த் வேடத்தில் தேவமோகனும் நடித்திருந்தனர். மோகன் பாபு, அனன்யா நாகல்லா, சச்சின் கேத்கர், கவுதம் மற்றும் மதுபாலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை குணசேகர் தனயா நீலிமா குணாவுடன் இணைந்து தில் ராஜு தயாரித்துள்ளார் .

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்