சீரியல் நடிகை கைது..கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு, தனுஷ் பட நடிகை கர்ப்பகால போட்டோஷூட்! டாப் சினிமா செய்திகள் இன்று
சீரியல் நடிகை கைது..கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு, தனுஷ் பட நடிகை கர்ப்பகால போட்டோஷூட், கன்னட சூப்பர் ஸ்டாருக்கு அமெரிக்காவில் சிக்ச்சை உள்ள டாப் 10 சினிமா செய்திகள் இன்று எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

இயக்குநர் ஷங்கரின் நேரடி தெலுங்கு படமான கேம் சேஞ்சர் டீஸர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகியுள்ளது. அதேபோல் நயன்தாராவின் வாழ்க்கை மற்றும் திருமணம் பற்றிய டாக்குமென்டரியானநயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சிகிச்சை பெற இருக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்
உடல் நல பிரச்சினை காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வரும் கன்னட சூப்பர் ஸ்டார் ஹீரோவான ஷிவ்ராஜ் குமார், விரைவில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அமெரிக்கா செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகனான இவர், தமிழில் ரஜினிகாந்துடன் ஜெயிலர், தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து ஷிவ்ராஜ்குமார் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்த நிலையில், "நானும் மனிதன்தான். எனக்கும் உடல் நல பிரச்சினைகள் உண்டு. அதற்காக நான் சிகிச்சை பெற்று வருகிறேன். இரண்டு சிகிச்சை அமர்வுகள் முடிந்துவிட்டன. இன்னும் சில இன்னும் சில அமர்வுகள் உள்ளன. அந்த சிகிச்சை முடிந்த பின் அடுத்த கட்டமாக அமெரிக்காவில் சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறேன்" என்றார்.