பவர்புஃல் போதை பொருள் விற்பனை! சுந்தரி சீரியல் நடிகையை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்..பல நடிகைகளுக்கு தொடர்பு?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பவர்புஃல் போதை பொருள் விற்பனை! சுந்தரி சீரியல் நடிகையை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்..பல நடிகைகளுக்கு தொடர்பு?

பவர்புஃல் போதை பொருள் விற்பனை! சுந்தரி சீரியல் நடிகையை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்..பல நடிகைகளுக்கு தொடர்பு?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 09, 2024 05:40 PM IST

சுந்தரி சீரியலில் நடித்து வரும் துணை நடிகை மீனா மெத்தபெட்டமைன் என்று போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் மால் அருகே பவர்புஃல்லான போதை பொருளுடன் இருந்த நடிகையை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இந்த விவகாரத்தில் மேலும் பல நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது

பவர்புஃல் போதை பொருள் விற்பனை! சுந்தரி சீரியல் நடிகையை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்..பல நடிகைகளுக்கு தொடர்பு?
பவர்புஃல் போதை பொருள் விற்பனை! சுந்தரி சீரியல் நடிகையை சுற்றி வளைத்து பிடித்த போலீசார்..பல நடிகைகளுக்கு தொடர்பு?

சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

நடிகை மீனா போதை பொருளான மெத்தபெட்டமைன் வாங்கி, விற்று வருவதாக நுண்ணறிவு பிரிவில் இருக்கும் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நடிகை மீனாவை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, சென்னை ராயாப்பேட்டை பகுதியில் உள்ள மால் அருகே போதை பொருள்களை நடிகை மீனா விற்று வருவது போலீசாருக்கு தெரியவந்தது. உடனடியாக உஷாரான போலீசார் மீனாவை போதை பொருள் வைத்திருக்கும்போது சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.அவரிடமிருந்து 5 கிராம் அளவில் மெத்தபெட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சினிமா நடிகர்களுக்கு சப்ளை

கைதான மீனா போதை பொருள்கள் விற்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம். டிவி சீரியல்கள் மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் நடித்து வரும் இவர், சினிமா நடிகர்கள் பலருக்கு மெத்தபெட்டமைன் போதை பொருளை சப்ளை செய்துள்ளாராம்.

ஒருவரிடத்திலிருந்து போதை பொருளை வாங்கி இன்னொருவரிடத்தில் அதிக விலைக்கு அவர் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவலறிந்த நுண்பிரிவு போலீசார் மீனாவிடம் போதை பொருள் வாங்குவது போல் பேசி, அவரை வரவழைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து மீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர் மெத்தபெட்டமைன் யாரிடம் வாங்குகிறார், எங்கிருந்து அவை வருகின்றன மற்றும் போதை பொருளை யாருக்கெல்லாம் சப்ளை செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

மீனாவிடம் பெறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏராளமான நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் சிக்குவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெத்தபெட்டமைன் போதை பொருள்

தமிழ்நாட்டில் கஞ்சா, ஹெராயின் போன்ற பல்வேறு போதை பொருள்களின் புழக்கம் அதிகமாகவே இருந்து வரும் நிலையில், போலீசார் அவ்வப்போது குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் போதை பொருள்கள் பெருகுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

போதை பொருள்களில் அதிக போதை தருவதாக கூறப்படும் மெத்தபெட்டமைன் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்த மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை தயாரிக்க சூடோபெட்ரின் (Pseudoephedrine) எனும் வேதி பொருள் உதவுகிறது.

இதையடுத்து அளவுக்கு அதிக போதை தரும் பொருளாக கருதப்படும் மெத்தபெட்டமைனுடன் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போதை பொருளை கடத்தியதாகத்தான் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருந்த நிலையில் டெல்லியில் வைத்து இவருடைய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.

சமீபத்தில் சென்னை நந்தம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை கடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரிடம் இருந்து 2.5 கிராம் மெத்தபெட்டமைன், பணம், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.