மார்க்கெட்டை காப்பாத்திக்க சிட்டாக பறந்த நடிகை.. தலையில் துண்டைப் போட்ட விஜய் டிவி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மார்க்கெட்டை காப்பாத்திக்க சிட்டாக பறந்த நடிகை.. தலையில் துண்டைப் போட்ட விஜய் டிவி!

மார்க்கெட்டை காப்பாத்திக்க சிட்டாக பறந்த நடிகை.. தலையில் துண்டைப் போட்ட விஜய் டிவி!

Malavica Natarajan HT Tamil
Nov 08, 2024 02:32 PM IST

விஜய் டிவியில் சமீபகாலமாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற மகாநதி சீரியல் நடிகை தனது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள அந்த சீரியலில் இருந்து விலகி சன் டிவிக்கு சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மார்க்கெட்டை காப்பாத்திக்க சிட்டாக பறந்த நடிகை.. தலையில் துண்டைப் போட்ட விஜய் டிவி!
மார்க்கெட்டை காப்பாத்திக்க சிட்டாக பறந்த நடிகை.. தலையில் துண்டைப் போட்ட விஜய் டிவி!

மார்க்கெட் சரிந்த விஜய் டிவி

மக்கள் மத்தியில் பீக்கில் சென்று கொண்டிருந்த பாக்கியலட்சுமி இல்லத்தரசியின் கதை, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை போன்ற நாடகங்கள் இப்போது எவ்வளவு முயற்சி எடுத்தாலும் மக்களை ஈர்க்கத் தவறுகிறது.

அதேபோல, ஒரு காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாளைத் தவிர மற்ற தினங்களில் மக்களிடம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. இதையடுத்து, விஜய் சேதுபதி விளையாட்டின் தீவிரத்தை அதிகப்படுத்துமாறு போட்டியாளர்களிடம் பலமுறை பலவிதங்களில் கூறியதே மக்களுக்கு ஒருவித அயர்ச்சியை அளித்தது.

சீரியலில் நடந்த முக்கிய மாற்றங்கள்

இது ஒருபுறம் இருக்க, விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பியை அதிகரிக்கும் நோக்கில், பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி, சின்ன மருமகள், நீ நான் காதல் போன்ற நாடகங்களில் உள்ள ஜோடிகளை நெருக்கமாக காட்டவும், அவர்களின் காதல் காட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, மகாநதி சீரியலில் விஜய்- காவேரி ஜோடிக்கு சமீபத்தில் மவுசும் கூடியது. இதை தக்க வைக்க நினைத்த சீரியல் நிர்வாகம், விஜய்யின் முன்னாள் காதலி உயிருடன் இருக்கும் தகவலை தற்போது காவேரியின் பிறந்த நாளன்று அவருக்கு தெரிவிக்க பல முயற்சிகளை செய்து வருவர்.

பறந்து சென்ற மகாநதி நடிகை

இந்நிலையில், ரசிகர்களுக்கு மட்டுமல்ல, சீரியல் டைரக்டருக்கே ட்விஸ்டு கொடுத்துள்ளார் இந்த சீரியலில் விஜய்யின் காதலி வெண்ணிலா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை.

கண்மனி என்ற சீரியல் நடிகை தற்போது வரை வெண்ணிலா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், அவர் முக்கியமான இந்த கட்டத்தில் சீரியலில் இருந்து விலகி உள்ளதாக அந்த நாடகத்தின் இயக்குநர் பிரவீன் பென்னட் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய கட்டத்தில் மாட்டிக் கொண்ட மகாநதி

நடிகை கண்மணிக்கு சன் டீவியில் ஒளிபரப்பாக உள்ள ராகவி எனும் சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம். இதனால் அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேறியதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், வெண்ணிலா கதாப்பாத்திரம் குறித்து கதை தீவிரமாக சென்று கொண்டிருக்கும் சமையத்தில் வெண்ணிலாவாக யார் நடிக்க உள்ளார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

இனி இவருக்கு பதில் இவர்

இதுகுறித்தும் பேசிய இயக்குநர் பிரவீன் பென்னட், ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் அஞ்சலி எனும் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த வைஷாலி தான் இனி வெண்ணிலாவாக நடிக்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

வைஷாலி முன்னதாக சன் டிவி, விஜய் டிவி என மாறி மாறி நடித்து வந்தார். பின் மிஸ்டர் அன்ட் மிஸ்ஸர்ஸ் சின்னத்திரையிலும் பங்கேற்று பிரபலமான நிலையில், தற்போது மகாநாதி சீரியலில் வெண்ணிலாவாக களமிறங்க உள்ளார்.

ஏற்கனவே மகாநதி சீரியலில் காவேரியின் அக்கா கங்கா கதாப்பாத்திரத்தில் நடித்த பலர் சீரியலில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது வெண்ணிலா கதாப்பாத்திரமும் விலகி உள்ளதால், இந்த சீரியலில் என்ன தான் நடக்கிறது என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.