"என்னடா பன்னிருக்கீங்க.."பக்கா தெலுங்கு மோடில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - ரேஸ் வேகத்தில் ராம் சரணின் கேம் சேஞ்சர் டீஸர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "என்னடா பன்னிருக்கீங்க.."பக்கா தெலுங்கு மோடில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - ரேஸ் வேகத்தில் ராம் சரணின் கேம் சேஞ்சர் டீஸர்

"என்னடா பன்னிருக்கீங்க.."பக்கா தெலுங்கு மோடில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - ரேஸ் வேகத்தில் ராம் சரணின் கேம் சேஞ்சர் டீஸர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 09, 2024 11:25 PM IST

பிரமாண்ட இயக்குநர் முதல் முறையாக இயக்கியிருக்கும் நேரடி தெலுங்கு படமாக ராம் சரணின் கேம் சேஞ்சர் உருவாகி வருகிறது. ரேஸ் வேகத்தில் பாக்கா தெலுங்கு மோடில் இருக்கிறது படத்தின் டீஸர்.

"என்னடா பன்னிருக்கீங்க.."பக்கா தெலுங்கு மோடில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - ரேஸ் வேகத்தில் ராம் சரணின் கேம் சேஞ்சர் டீஸர்
"என்னடா பன்னிருக்கீங்க.."பக்கா தெலுங்கு மோடில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - ரேஸ் வேகத்தில் ராம் சரணின் கேம் சேஞ்சர் டீஸர்

ஐய்யப்பா சாமிக்கு மழை அணிந்திருக்கும் ராம் சரண், இந்த நிகழ்ச்சிக்கு கருப்பு உடை அணிந்து, காலில் செருப்பு இல்லாமல் வந்திருந்தார். 

ரேஸ் வேகத்தில் கேம் சேஞ்சர் டீஸர் 

இதையடுத்து படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், யூடியூப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் பகிரப்பட்டுள்ளது. விறுவிறுப்பான காட்சிகளுடன், தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான பாணியில் அமைந்திருக்கும் டீஸரில், ராம் சரண் மூன்று விதமான லுக்குகளில் தோன்றுகிறார்.

ராம் சரணின் பல்வேறு பில்டப்களுடன் காட்சிகள் ஒவ்வொன்றாக வரும், டீஸரின் இறுதியில் "I am Unpredictable" என்ற ஒரு வசனத்தை மட்டும் பேசுகிறார். முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தை இயக்கியிருக்கும் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநரான ஷங்கர், முழுக்க தெலுங்கு சினிமா மோடுக்கே மாறிவிட்டதாக தெரிகிறது.

அதே சமயம் தனது படங்களில் இடம்பெறும் பிரமாண்டத்தையும் அவர் விடாமல் இந்த படத்தை உருவாக்கியிருப்பது படத்தின் டீஸரை பார்க்கையில் புரிகிறது.  தெலுங்கு ரசிகர்கள் மட்டுமன்றி, தமிழ் ரசிகர்களாலும் எதிர்பார்க்கப்படும் இந்த படம் வரும் 2025 ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

ஷங்கர் பங்கேற்வில்லை

லக்னோவின் நடைபெற்ற கேம் சேஞ்சர் டீஸர் நிகழ்வில் இயக்குநர் ஷங்கர் பங்கேற்கவில்லை. இதுபற்றி கேம் சேஞ்சர் டீஸர் வெளியீட்டு நிகழ்ச்சி தொடங்குதற்கு முன்னரே தனது எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த பதிவில், "லக்னோவாசிகளுக்கு வணக்கம்! 2025 சங்கராந்திக்கு #GameChangerஐ திரையில் ரசிகர்களுக்கு கொண்டு வர சென்னையில் எடிட்டிங்கில் இருப்பதால் இன்றும் உங்களை மிஸ் செய்கிறேன்!

எங்கள் அன்பான நட்சத்திரங்கள் மற்றும் குழுவினருடன் இன்றைய டீஸர் வெளியீட்டை நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்! மிக விரைவில் உங்களை சந்திப்பேன்…" என்று குறிப்பிட்டிருந்தார்.

கேம் சேஞ்சர் படம் பற்றி

கடந்த 2021இல் அறிவிக்கப்பட்டு தொடங்கிய இந்த படம் பல்வேறு தாமதத்துக்கு பிறகு இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது. இந்த படத்தில் நடிகை அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், நாசர், சமுத்திரகனி, ஜெயராம், நவீன் சந்திரா, சுனில், முரளி ஷர்மா உள்பட பலரும் நடித்துள்ளார்கள். படத்துக்கு இசை - தமன். ஒளிப்பதிவு - திரு. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.

அரசியல ஆக்‌ஷன் திர்ல்லர் பாணியில் உருவாகியிருக்கும் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ளார். படத்திலிருந்து ஏற்கனவே ஜருகண்டி, ரா மச்சா என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து படம் தெலுங்கு, தமிழ் உள்பட இதர தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹைதராபாத், மும்பை, சண்டிகர், ஆந்திர பிரதேசம், நியூசிலாந்து உள்பட பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது.

ராம் சரண் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆர்ஆர்ஆர், ஆச்சார்யா ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன. இதில் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆருடனும், ஆச்சார்யா படத்தில் தந்தை சிரஞ்சீவியுடனும் நடித்திருந்தார் ராம் சரண். இதையடுத்து தற்போது சோலோ ஹீரோவாக அவரது நடிப்பில் கேம் சேஞ்சர் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடம் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.