தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Selvaraghavan's Bakasuran And Dhanush's Vaathi To Release On The Same Date

Bakasuran vs Vaathi: வெல்லப்போவது யார்? ஒரேநாளில் திரையில் மோதும் அண்ணன், தம்பி!

Karthikeyan S HT Tamil
Jan 28, 2023 01:12 PM IST

நடிகர் தனுஷ், செல்வராகவன் என சகோதரர்கள் இருவரும் நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளன.

ஒரே நாளில் வெளியாகும் தனுஷ், செல்வராகவன் படங்கள்
ஒரே நாளில் வெளியாகும் தனுஷ், செல்வராகவன் படங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஃபரூக் பாட்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. பகாசூரன் என வித்தியான தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில், நெற்றியில் பட்டை, குங்குமம், கழுத்தில் ருத்ராட்சை மாலை என கோயில் பூசாரி போல மிரட்டலாக இருக்கிறார் செல்வராகவன். இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது

இந்நிலையில், பகாசூரன் படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இயக்குநராக இருந்து நடிகரான செல்வராகவனை மாறுபட்ட கோணத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

இதே நாளன்று தனுஷின் ‘வாத்தி’ படமும் வெளியாகிறது. செல்வராகவன் - தனுஷ் படங்கள் ஒரேநாளில் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எந்தப் படம் வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்