தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sara Ali Khan: 'பைத்தியக்காரனை திருமணம் செய்ய ஆசை' - சாரா அலி கான்

Sara Ali Khan: 'பைத்தியக்காரனை திருமணம் செய்ய ஆசை' - சாரா அலி கான்

Aarthi V HT Tamil
Apr 03, 2023 01:12 PM IST

நடிகை சாரா அலி கான் தனது திருமண எண்ணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சாரா அலி கான்
சாரா அலி கான் (Instagram/@saraalikhan95)

ட்ரெண்டிங் செய்திகள்

சிறுவயதிலேயே தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றுள்ளார். இவர் தற்போது தனது தனிப்பட்ட விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசி வருகிறார். தற்போது ​​அவர் நடித்த கேஸ்லைட் படம் டிஸ்னி + பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு நேர்காணலில் பங்கேற்ற சாரா அலி கான், தனது வருங்கால கணவர் மற்றும் திருமணம் குறித்த சுவாரசியமான விஷயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "எனக்கு வரப்போகும் கணவனை இப்போதே தேடிக் கொண்டிருக்கிறேன். அவன் பார்வையற்றவனாகவும் பைத்தியக்காரனாகவும் இருக்க வேண்டும். எனக்கு அப்படிப்பட்ட ஒருவன் வேண்டும். ஏனென்றால் அவன் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தாலும் என்னைப் பற்றி அறிந்து ஓடிவிடுவார்.

எனக்கு திருமணத்தில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் எல்லாம் சரியான நேரத்தில் நடக்கும் என்று நினைக்கிறேன். அந்த நேரம் இன்னும் வரவில்லை. திருமணத்தை எதிர்பார்க்கிறேன்” என்றார்.

சாரா அலி கான் முன்பு பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செய்தார். இருவரும் லவ் ஆஜ் கல் படத்திற்காக பணியாற்றினார்கள், அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நெருக்கம் ஏற்பட்டது. ஆனால் சிறிது நாள் கழித்து அவர்கள் பிரிந்தனர். அப்போதிலிருந்து இவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறார்.

சாரா, விக்கி கவுஷலுக்கு ஜோடியாக லஷ்மன் உதேகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும். இது தவிர ஏ வதன் மேரா வதன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்