தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sai Pallavi: ரிசல்ட் தெரிந்து சாய் பல்லவி ரிஜெக்ட் செய்த படங்கள் என்னென்ன தெரியுமா?

Sai Pallavi: ரிசல்ட் தெரிந்து சாய் பல்லவி ரிஜெக்ட் செய்த படங்கள் என்னென்ன தெரியுமா?

Aarthi V HT Tamil
Nov 01, 2023 11:03 AM IST

நடிகை சாய் பல்லவி நிரகாரித்த படங்கள் பற்றி பார்க்கலாம்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த விஷயத்தில் நடிகை சாய் பல்லவி முற்றிலும் மாறுபட்டவர். கேரியரில், சாய் பல்லவி நடித்த படங்களை விட அவர் விட்டுச் சென்ற படங்களின் பட்டியல் பெரியது. அஜித், விஜய் தேவரகொண்டா மற்றும் பல ஹீரோக்களின் படங்களை சாய் பல்லவி நிராகரித்தார். அவர் நிராகரித்த படங்கள் என்ன?

சந்திரமுகி 2

ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி 2 சமீபத்தில் திரைக்கு வந்தது. ரஜினியின், சந்திரமுகி படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் நடிகத்த பாத்திரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க இயக்குநர் பி.வாசு முதலில் நினைத்தார்.

ஆனால் படத்தின் நீளம் குறைவாக இருந்ததாலும், கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாததாலும் சாய் பல்லவி படத்தை நிராகரித்துள்ளார். சந்திரமுகி 2 விஷயத்தில் சாய் பல்லவியின் தீர்ப்பு சரியானது என ரசிகர்கள் கூறினர்.

போலா சங்கர்

போலா சங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக சாய் பல்லவி நடிக்கவிருந்தார். இயக்குநர் மெஹர் ரமேஷ் இந்த வேடத்தில் சாய் பல்லவியை அணுகினார். ஆனால் இந்த படத்தை சாய் பல்லவி மறுத்துள்ளார். சாய் பல்லவியை விட்டு விலகிய இந்த வேடத்தில் கீர்த்திசுரேஷ் நடித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆகஸ்டில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போலா சங்கர்  மிகப்பெரிய தோல்வியாக அமைந்தது. கடந்த காலங்களில் ரீமேக் படங்களுக்கும், ஒப்பீடுகளுக்கும் பயந்து அந்த படத்தில் இருந்து விலகியதாக சாய் பல்லவி தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மையல்ல, கதையை கேட்டு ஒர்க் அவுட் ஆகாது என்று சாய் பல்லவி கருதியதாகவும், அதனால் தான் இந்த படத்திற்கு சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

டியர் காம்ரெட்

விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரெட் ஆகிய படங்களிலும் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க இருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. இவை தவிர அஜித் வலிமை, மகேஷ் பாபு சரிலேரு நீக்கேவரு, விஜய் லியோ படங்களில் கதாநாயகியாக சாய் பல்லவியின் பெயர் அடிபட்டது.

தேதிகள் சரியில்லாத காரணத்தாலும், வேறு காரணங்களாலும் சாய் பல்லவியால் இந்தப் படங்களில் நடிக்க முடியவில்லை. இதில் சாய் பல்லவி நிராகரித்த பெரும்பாலான படங்கள் தோல்வியில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்