தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sachin With Suriya Photo Goes Viral

Sachin with Suriya: சூர்யாவுடன், சச்சின் - வைரலாகும் புகைப்படம்

Aarthi V HT Tamil
Feb 16, 2023 11:49 AM IST

சூர்யாவும், சச்சினும் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகிறது.

சூர்யா, சச்சின்
சூர்யா, சச்சின்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பூஜை கடந்த ஆண்டு தொடங்கியது. இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அகரம் பவுண்டேஷனில் நடந்தது. இந்த படத்திற்கு, சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுதவிர வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம், டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யாவின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. நடிகர் சூர்யா தற்போது மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

 அங்கு தான் இவரது மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோரும் உள்ளனர். சமீபத்தில் கூட புதிதாக வாங்கி செல்ல நாய் குட்டியின் வீடியோவை வெளியிட்டு இருந்தார் ஜோதிகா.

இதே போல் சச்சினை அவரது இல்லத்தில் சந்தித்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏ. ஆர். ரஹ்மானை இசைப்புயல் என தமிழில் குறிப்பிட்டு சச்சின் மகிழ்ச்சியாக இப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் உடன் நடிகர் சூர்யா எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்