தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ssrajamouli:வரிசை கட்டும் விருதுகள்; சொந்த பணத்தை கொடுத்தாரா ராஜமெளலி?

SSRajamouli:வரிசை கட்டும் விருதுகள்; சொந்த பணத்தை கொடுத்தாரா ராஜமெளலி?

Kalyani Pandiyan S HT Tamil
Mar 04, 2023 12:22 PM IST

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை விருது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வதற்கு மட்டுமே படக்குழு 83 கோடி வரை செல்வழித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது

ராஜமெளலி
ராஜமெளலி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களுடன் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பிரபல இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்த இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் வெளியான இந்த படம் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று 1200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.

இந்த வரவேற்பை தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஜப்பானில் வெளியானது. அங்குள்ள மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற ஆர்.ஆர்.ஆர் அங்கும் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. குறிப்பாக ஜப்பானில் முன்னதாக வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படம் என்று சாதனை படைத்திருந்த ரஜினியின் முத்து படத்தின் வசூலை விட அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இதன் மூலம் ஜப்பானில் வெளியாகி அதிக வசூலை ஈட்டிய இந்திய படமாக ஆர்.ஆர்.ஆர் மாறியது.

இதுமட்டுமல்லாமல் இந்தப்படத்தில் இடம் பெற்று வரவேற்பை பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதையும் வென்றது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கேமரூன் ஆகியோரும் இந்தப்படத்தை வெகுவாக பாராட்டினர். அதனை தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் விருது விழாவிலும் 4 விருதுகளை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வென்றது. 

இந்த நிலையில் பிரபல ஊடகமான பிங்க் வில்லா ஆஸ்கர் உட்பட பல விருது நிகழ்ச்சிகளுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தை கொண்டு செல்ல இயக்குநர் ராஜமெளலி மற்றும் படக்குழு கிட்டத்தட்ட 83 கோடி வரை செல்வழித்துள்ளதாக ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

அந்த தகவலின் படி, “ ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட விருது நிகழ்ச்சிகளுக்கு ஆர்.ஆர்.ஆர் படத்தை கொண்டு செல்வதற்கான பிரசாரத்தை மேற்கொள்ள படக்குழு 83 கோடி ரூபாய் வரை செல்வழித்து இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அதில் பெரும் தொகையை இயக்குநர் ராஜமெளலியே தனது சொந்த பணத்தில் இருந்து எடுத்துக்கொடுத்துள்ளார். 

இதர தொகையானது ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் ஆர்.ஆர்,ஆர் படம் வசூலித்த தொகையில் இருந்து கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாக வில்லை.

முன்னதாக இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதிற்கு ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியா சார்பில் அந்தப்படம் அனுப்பபடவில்லை. இந்த நிலையில்தான் தனியாக ஆஸ்கர் விருதில் களமிறங்க ஆர்.ஆர்.ஆர் படக்குழு  முடிவெடுத்தது. 

அதே பாணியில்தான் அவர்கள் கோல்டன் குளோப் விருது மற்றும் ஹாலிவுட் கிரிட்டிஸ் விருது நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆஸ்கர் விருது பட்டியலில் சிறந்த அசல் பாடல்களுக்கான பிரிவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகி இருக்கிறது. வரும் மார்ச் 12 -2023 அன்று நடக்கும் ஆஸ்கர் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்