தமிழ் செய்திகள்  /  Entertainment  /  'Rockstar' Ramaniammal Passed Away

Ramaniammal Passed Away : ஷாக்.. ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் காலமானார்!

Divya Sekar HT Tamil
Apr 04, 2023 12:00 PM IST

பாடகி ‘ராக்ஸ்டார்’ ரமணியம்மாள் வயது மூப்பால் இன்று காலமானார்.

ரமணியம்மாள் காலமானார்
ரமணியம்மாள் காலமானார்

ட்ரெண்டிங் செய்திகள்

ரமணியம்மாள் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து, மிகுந்த அவதிப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், அவரின் பாடல் பாடும் திறனை அறிந்த சிலர் 'ஜீ தமிழ்' தொலைக்காட்சி நடத்தும் 'சரிகமப' நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டனர். 

அதில் தொடர்ந்து பாடி, இரண்டாமிடத்தைப் பெற்று, அதற்காக பரிசும் பெற்றுள்ளார்.இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரை ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் அன்போடு அழைத்து வந்தனர்.

இவர் ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்