தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthik Indraja: மாமியாருக்கு உதட்டோடு உதடு முத்தம்… சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. - மருமகன் பதில்!

Karthik Indraja: மாமியாருக்கு உதட்டோடு உதடு முத்தம்… சர்ச்சையை கிளப்பிய வீடியோ.. - மருமகன் பதில்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 16, 2024 05:27 PM IST

அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்கும். வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காமல் இருந்திருக்கும். அந்த மாதிரியான நபர்கள்தான் இப்படி கமெண்ட் செய்திருப்பார்கள்

உதட்டோடு உதடு முத்தம் வைத்தது ஏன்?
உதட்டோடு உதடு முத்தம் வைத்தது ஏன்?

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து படங்கள் நடித்து வந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது உடல் மெலிந்து காணப்பட்டது. 

அதிலிருந்து தற்போது அவர் மீண்டு வந்திருக்கும் நிலையில், அவருடைய மகளான இந்திராஜாவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண நிகழ்வின் போது, கார்த்திக் தன்னுடைய மாமியாரான பிரியங்காவிற்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார். 

இந்த செயல் கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அதற்கு இந்திரஜா மற்றும் கார்த்திக் பதிலடி கொடுத்திருக்கின்றனர். 

இது குறித்து இந்தியா கிளிட்ஸ் சேனலுக்கும் கார்த்திக் பேசும் போது, “ எதிர்மறையான விஷயங்களைப் பொறுத்தவரை அதில் நிறைய விதம் இருக்கிறது. சில பேர், பொதுவெளியில் இப்படி நடந்து கொள்வது சரியில்லை என்று அறிவுரை கூறுவார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். 

அறியாமையில் பேசுவார்கள்

ஆனால் சில பேர் அறியாமையில் பேசுவார்கள். தற்போது எங்களுக்கு கல்யாணம் முடிந்து விட்டது. ஒரு சில பேர் எங்களுடைய முந்தைய வீடியோக்களை பார்த்துவிட்டு என்ன இந்திரஜா காலில் மெட்டி இல்லாமல்,கழுத்தில் தாலி இல்லாமல் இருக்கிறாய் என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள். ” என்று பேசினார் 

இதற்கிடையே பேசிய ரோபோ ஷங்கர், “அவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்கும். வாழ்க்கையில் எதுவுமே கிடைக்காமல் இருந்திருக்கும். அந்த மாதிரியான நபர்கள்தான் இப்படி கமெண்ட் செய்திருப்பார்கள்.” என்று பேசினார்.

உதட்டோடு உதடு முத்தம் ஏன்? 

தொடர்ந்து கார்த்திக் பேசும் போது, “திருமண நிகழ்வில் பாடலுக்கு நாங்கள் சந்தோஷமாக நடமாடிக் கொண்டிருந்தோம்.அப்போது அக்கா எனது கன்னத்தில் முத்தமிட்டார். நான் மீண்டும் அவருக்கு முத்தம் கொடுக்கும் பொழுது, அக்கா திரும்பி விட்டார் அப்பொழுது நான் முத்தமிட்டது, அவரது உதட்டில் பட்டது போல மாறிவிட்டது. இதனை பல பேர் எனக்கு ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பினார்கள். உண்மையில் அது எப்போது நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை.

இதையடுத்து நாங்கள் குடும்பமாக உட்கார்ந்து இது எப்போது நடந்தது என்பது குறித்து விவாதம் செய்தோம். அது எதேச்சையாக நடந்ததுதான். 

ஆனால் அதை சிலர் கல்யாணத்திற்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்று செய்தார்கள். ஆனால் உண்மை என்பது எங்களுக்கு தெரியும்” என்று பேசினார். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்