தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Marimuthu: ‘ஒரே நுரை.. 4 ஷாக் வெச்சோம்.. 2 ஸ்டெண்ட் இருந்தது’ மாரிமுத்துக்கு இறுதி சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி!

RIP Marimuthu: ‘ஒரே நுரை.. 4 ஷாக் வெச்சோம்.. 2 ஸ்டெண்ட் இருந்தது’ மாரிமுத்துக்கு இறுதி சிகிச்சை அளித்த டாக்டர் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 09, 2023 08:40 AM IST

Ethirneechal Marimuthu: ‘அவருடைய பழைய மருத்துவ ரெக்கார்டு பார்த்ததில், அவருக்கு இரு ஸ்டெண்ட் வைக்கப்பட்டிருந்தது’

மறைந்த நடிகர் மாரிமுத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஆனந்தகுமார்
மறைந்த நடிகர் மாரிமுத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஆனந்தகுமார்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘டப்பிங் தியேட்டரிலிருந்து காலை 8:30 மணியளவில் கார் ஓட்டிக் கொண்டு, சூர்யா மருத்துவமனைக்கு வந்தார். காரில் இருந்து அவரால் இறங்க முடியவில்லை. எங்கள் தரப்பில் அவரை காரில் இருந்து இறக்க முயற்சித்த போது, அவர் உடல் முழுவதும் வியர்த்திருந்தது. அவரால் காரில் இருந்து இறங்கவே முடியவில்லை.

நெஞ்சு வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். மருத்துவமனை ஊழியர்கள், அவரை கீழே இறக்க முயற்சித்த போது, நெஞ்சை பிடித்துக் கொண்டு தான் இறங்கியுள்ளார். அங்கிருந்தவர்கள் அவருக்கு உதவ முயற்சிக்கும் போது, அவர்கள் மீது  சாய்ந்துள்ளார். 

உடனே அவசர சிகிச்சை பிரிவில் அவரை சேர்த்தோம். அவருடைய ஃபல்ஸ் ரொம்ப மோசமாக இருந்தது. சுவாசமும் இக்கட்டான நிலையில் இருந்தது. உடனே சிபிஆர் சிகிச்சை தொடங்கினோம். எமர்ஜென்சி மருந்துகள் வழங்கினோம். அட்டர்னலின், பைஃகாப் மருந்துகள் உடனே அவருக்கு கொடுத்தோம். 

மஜாஜ், வென்டிலேஷன் ஆகியவற்றையும் முயற்சித்தோம். 15 முதல் 20 நிமிடம் அதிகபட்சம் என்ன செய்ய முடியுமோ, அதை முயற்சித்துப் பார்த்தோம். இறுதியில் பிபி, பல்ஸ் இரண்டுமே மீட்க முடியவில்லை. 4 முறை ஷாக் முயற்சித்துப் பார்த்தோம், அப்போதும் மீட்க முடியவில்லை. 

வாயில் இருந்து ஒரே நுரை வரத் தொடங்கிவிட்டது. நிறைய நுரை வந்தது. இதயம் செயலிழக்கும் போது, அப்படி தான் வரும். இறுதியில் எங்களால் வெற்றிகரமாக அந்த சிகிச்சையை முடிக்க முடியவில்லை. அதன் பின் மனைவி, மகள், சகோதரர் வந்தார்கள். அவர்களிடம் அனைத்தையும் விளக்கினோம். 

அவர்கள் அதை ஏற்றுக் கொண்ட பின், ஆம்புலன்ஸில் அவர்களிடம் சடலத்தை ஒப்படைத்தோம். மாரடைப்பை பொருத்தவரை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. மாரிமுத்து சார், ஷூட்டிங்கில் உடலை வருத்திக் கொண்டாரா என்பதைப் பற்றி தெரியவில்லை. அவருடைய பழைய மருத்துவ ரெக்கார்டு பார்த்ததில், அவருக்கு இரு ஸ்டெண்ட் வைக்கப்பட்டிருந்தது.

எல்.ஏ.டி., என்கிற ஸ்டெண்ட் ஒன்று, மற்றொன்று எல்.சி.எக்ஸ் என்கிற ஸ்டெண்ட் போடப்பட்டிருந்தது. இது தான் அது தொடர்பான மாத்திரை அவர் கண்டிப்பாக எடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, அவருக்கு சர்க்கரை நோயும் இருக்கிறது. தினமும் அவர் சரியாக தான் ஃபாலோ செய்திருக்கிறார். ஸ்டைன் அதிகம் இருந்தால், அட்டாக் வரும். அப்படி தான் வந்திருக்க வேண்டும்,’’
என்று டாக்டர் ஆனந்தகுமார் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்