தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Raghava Lawrence Wishes To Dada Movie Crew

Raghava Lawrence: டாடா படம் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ராகவா லாரன்ஸ்

Aarthi V HT Tamil
Feb 16, 2023 12:23 PM IST

டாடா படத்தை பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

டாடா
டாடா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

ஒரு அப்பா தன் மகனை அம்மா துணை இல்லாமல் ஒழுக்கமாக வளர்க்கிறார் மற்றும் இறுதியில் அவர்கள் எப்படி ஒன்று சேர்க்கின்றனர் என்பதே படத்தின் கதையாகும். ரசிகர்கள் நிச்சியமாக படத்தை பார்த்து கண்ணீர் சிந்தி இருப்பார்கள்.

டாடா படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், நடன மாஸ்டருடமான ராகவா லாரன்ஸ் டாடா படத்தை புகழ்ந்து தள்ளி உள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், “ நான் தாதா படத்தைப் பார்த்தேன், உணர்ச்சிவசப்பட்டேன். அனைவரும் திரையரங்குகளில் பார்க்கக் கூடிய சரியான குடும்பப் படம். 

தயாரிப்பாளருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குநரால் நன்றாக எழுதப்பட்டு இயக்கப்பட்ட படம். படத்தில் அனைவரும் நன்றாக நடித்து இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ”டாடா படத்தைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்களைக் கேள்விப்பட்டு வருகிறேன். வாழ்த்துகள்டா கவின்! டாதா முழு படக்குழுவிற்கும் நல் வாழ்த்துக்கள்" என  ட்வீட் செய்து இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்